“ஆப்கன் பிரச்சினை“ட்வீட்டை டெலிட் செய்த சேரன்… நாகரீகம் தெரியாமல் பேசுகிறார்கள் !

சென்னை : ஆப்கன் பிரச்சினை குறித்து இயக்குனர் சேரன், ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார்.

அந்த பதிவுக்கு ட்விட்டரில் எதிர்ப்பு வலுத்ததால் அந்த பதிவை சேரன் டெலிட் செய்தார்.

மேலும், அரசியல் காழ்ப்புணர்வுகளோடு, மத இன உணர்வுகளோடு வெறி கொண்டு அலையும் எவரும் என் நண்பர்களாக இணையவேண்டாம் என்று மற்றொரு பதிவை பகிர்ந்துள்ளார்.

தாலிபன்

தாலிபன்

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க படையினரால் ஆளுகையில் இருந்து அகற்றப்பட்ட தாலிபன்கள், அமெரிக்க கூட்டுப்படை விலக்கல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆப்கன் நகரங்களை படிப்படியாக அவர்கள் கைப்பற்றத் தொடங்கினார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இப்போது ஆப்கன் அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. ஆப்கன் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. நேற்றைய தினம் காபூலில் உள்ள அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.

விமானநிலையத்தில் கூட்டம்

விமானநிலையத்தில் கூட்டம்

இந்த நிலையில் விமான நிலையங்களை தலிபான்கள் நெருங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததால் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மக்கள் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக குழுமியுள்ளனர். விமான நிலைய நுழைவாயில்களின் மீது ஏறி குதிக்க மக்கள் முற்படுகிறார்கள். விமான நிலைய வளாகத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவோ தண்ணீரோ கிடைக்கவில்லை. ஏராளமான பெண்கள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் பலரும் அங்கு இருக்கிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த கவனம்

உலகின் ஒட்டுமொத்த கவனம்

ஆப்கானிஸ்தான் விவகாரம், உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. பலவிதமான கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆப்கானின் பெண் இயக்குனரான சஹ்ரா கரிமி, உலகம் முழுவதும் உள்ள சினிமா சமூகத்திற்கும் ஆப்கன் நிலைமை பற்றிய கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

ட்விட்டரில் கடிதம்

ட்விட்டரில் கடிதம்

அதில், தாலிபான்களிடமிருந்து சினிமா படைப்பாளிகளையும், எனது அழகான மக்களையும் பாதுகாக்க எங்களுடன் நீங்கள் இணைவீர்கள் என்ற ஆழமான எதிர்பார்ப்புடன் இந்தக் கடிதத்தை உடைந்த இதயத்துடன் எழுதுகிறேன், என்று அவரது ட்விட்டரில் மூன்று தினங்களுக்கு முன்பு எழுதியுள்ளார்.

டெலிட் செய்த சேரன்

டெலிட் செய்த சேரன்

அவரது பதிவை இந்தியத் திரையுலகினர் பலரும் ஷேர் செய்துள்ளனர். தமிழ் சினிமா இயக்குனரான சேரனும் அந்தப் பதிவை நேற்று ஷேர் செய்திருந்தார். சேரனின் அந்தப் பதிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமான கருத்துக்களை பதிவிடத் தொடங்கிவிட்டனர். இதனால், சேரன் அந்த பதிவை டெலிட் செய்து விட்டார்.

நாகரீகம் தெரியாமல்

நாகரீகம் தெரியாமல்

மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில், அரசியல் காழ்ப்புணர்வுகளோடு, மத இன உணர்வுகளோடு வெறி கொண்டு அலையும் எவரும் என் நண்பர்களாக இணையவேண்டாம். நாகரீகம் தெரியாமல் வார்த்தைகள் பயன்படுத்தும் எவரையும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி மீறி வந்தால் பிளாக் பண்ணத்தான் செய்வேன். அப்பறம் ஸ்கிரீன் ஷாட் போட்டு கதறக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X