Ramadoss Bio Pic: சேரன் இயக்கத்தில்.. படமாக உருவாகும் பா.ம.க தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு!

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பா.ம.க தலைவர் ராமதாஸ். அரசியல் தளத்தில் ராமதாஸ் என்றாலே அறிக்கை, அறிக்கை என்றாலே ராமதாஸ் என கூறும் அளவுக்கு, அவரது அறிக்கைகள் ஆளும் ஆட்சியாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. அவரது 87வது பிறந்த நாளில், அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படுகிறது என்ற அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இது பாமக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1989ஆம் ஆண்டு மருத்துவர் ராமாதாஸால் தொடங்கப்பட்டு 36 ஆண்டுகளைக் கடந்த அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தமிழ்நாடு அரசியலில் மிகவும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் யானைச் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலைச் சந்தித்த இந்த கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அங்கீகாரம் பெற்ற பின்னர் யானைச் சின்னத்தை இழந்தது. அதன் பின்னர்தான் மாம்பழம் சின்னத்தை பெற்றது.

Director Cheran Directs PMK Leader Ramadoss Bio Pic Actor Aari Acts As Ramadoss
Photo Credit:

ராமதாஸின் அறிக்கைகளை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தைலாபுரம் தைலம் எனக் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இவரது அரசியல் தமிழ்நாடு அரசியல் தளத்தில் தீர்க்கமாக இருந்துள்ளது. உழைக்கும் மக்களான வன்னியர் சமூக மக்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இப்போதும் போராடிக் கொண்டு உள்ளார். இதனால் அம்மக்களால் சமூகநீதிக் காவலர் என அழைக்கப்படுகிறார். இவர் தனது கட்சியை தொடங்கிய போது, அதன் பொதுச் செயலாளராக ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இருப்பார் எனவும் பொருளாளராக சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் எனவும் விதிகளை வகுத்து கட்சி தொடங்கினார்.

ராமதாஸாக ஆரி: தமிழ்நாடு அரசியல் களத்தில் வேறு எந்த அரசியல் கட்சியுமே செய்யாத நிழல் நிதி அறிக்கை என்ற அறிக்கையை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னர் வெளியிடுவார். அதேபோல், வேளாண் நிழல் நிதி அறிக்கையும் வெளியிடுவார். இன்று அவருக்கு 87வது பிறந்த நாள் என்பதால் படக்குழு சார்பில் அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொண்டர்கள் மகிழ்ச்சி: இந்த படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார். மேலும் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி நடிக்கிறார். படத்தை தமிழ் குமரனின் தமிழ் குமரன் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு பா.ம.க தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதால் அது இப்போது வரையிலான சமகால அரசியலையும் படம் கொண்டிருக்குமா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

Director Cheran Directs PMK Leader Ramadoss Bio Pic Actor Aari Acts As Ramadoss
Photo Credit:

இணையவாசிகள் கேள்வி: குறிப்பாக தனது குடும்பத்தில் இருந்து தேர்தல் அரசியலுக்கு யாரும் வர மாட்டார்கள் எனக் கூறினார். ஆனால் அவரது மகன், மருமகள் என தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்துக் கொண்டு தான் உள்ளார்கள். இது இப்படி இருக்க, தற்போது ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில் நடைபெறும் பிரச்னையும் படத்தில் வருமா எனவும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X