லட்சத்தை தொட்ட ஃபாலோயர்ஸ்.. ஆனால் சந்தோசம் கொள்ள முடியவில்லையம்மா.. பிரபல இயக்குநர் உருக்கம்!
சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்த போதும் அதனால் தனக்கு சந்தோஷம் இல்லை என பிரபல இயக்குநர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சேரன்.
இயக்குநர் கேஎஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக கேரியரை தொடங்கினார்.

பல வெற்றி படங்கள்
பின்னர் 1997ஆம் ஆண்டு பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக திருமணம்
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சேரன். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன் அப்படத்தில் அறிவுடைதம்பி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தும் இருந்தார்.

பிக்பாஸ் சீசன் 3
நான்கு தேசிய விருதுகள், 6 தமிழக அரசின் விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன்.

ரசிகர்களுக்கு அப்பா
இதில் மக்கள் ஆதரவுடன் 77 நாட்கள் இருந்த சேரன், மக்களின் அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான லாஸ்லியா, இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்றழைத்ததால் ரசிகர்களும் அவரை அப்பா என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.

ஒரு லட்சம்
இந்நிலையில் இயக்குநர் சேரனை டிவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனை பார்த்த ரசிகை ஒருவர், 100 கே ஃபாலோயர்ஸ் அப்பாவுக்கு வாழ்த்துக்கள்!
மனிதத்தை ஆதரியுங்கள்
இந்த பிளாட்ஃபார்மில் அனுபவங்களையும் மைல்கற்களையும் மனிதநேயத்துடன் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். சமூக விஷயங்களில் நம்பிக்கையை சார்பு இல்லாமல் வெளிப்படுத்துங்கள் & மனிதநேயத்தை ஆதரியுங்கள்.. என பதிவிட்டிருந்தார்.

சந்தோஷப்பட முடியவில்லை
இந்த டிவிட்டை பார்த்த இயக்குநர் சேரன், இந்த சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லையம்மா என உருக்கமாக பதிவிட்டுள்ளார். கொரோனாவால் நாளுக்கு நாள் மக்களு மடிந்து வரும் நிலையில் இதனால் சந்தோஷப்பட முடியவில்லை என கூறியுள்ளார்.
கொரோனா பிடியில்..
இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, உலகில் மக்களின் எண்ணிக்கை நம் நண்பர்களின் எண்ணிக்கை, நம் உறவினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதால் இதில் உயரும் நண்பர்கள் எண்ணிக்கையால் சந்தோசம் கொள்ள முடியவில்லைம்மா.. கொரோனா பிடியில் ஏகப்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம்ம். இனியும் இழக்காமல் இருக்க முயல்வோம்.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











