நாம பேசுறதெல்லாம் கேக்கும் போல.. டிவிட்டருக்கும் காது உண்டு.. சேரனுக்கு நடந்த விஷயத்த பாருங்க!
சென்னை: இயக்குநர் சேரன், தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தால் டிவிட்டருக்கும் காது உண்டு போல என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள சேரன், பல படங்களில் நடித்துள்ளார்.
4 தேசிய விருதுகளை குவித்துள்ள இயக்குநர் சேரன், தமிழக அரசின் விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

கமல் வழங்கிய விருது
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் 90 நாட்களுக்கு மேல் அங்கிருந்தார். மேலும் கமல்ஹாசனிடம் இருந்து மோஸ்ட் டிஸிப்பிளின் பர்சன் என்ற விருதையும் பெற்றார்.

சேரனுக்கு ப்ளூ டிக்
டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள இயக்குநர் சேரன் பல காலமாய் ப்ளூ டிக் பெறாமல் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், உங்களின் டிவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைடு என்று ப்ளூ டிக் பெறுங்கள் என்று கூறி வந்தனர்.

வேணாம்ங்றேன்
கடந்த வாரம், இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் சேரன், இங்கே பதில் வருவதற்கும் லைக் வாங்குவதற்கும் ரீடுவீட்டுக்கும் புளூ டிக் தேவையென சிலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள்... அப்படி ஒரு டிக்கே வேணாம்ன்றேன்.... எனக்கு ரசிகர்கள் மக்களிடம் இருந்து கிடைக்கும் டிக் போதும்ன்றேன்.... என பதிவிட்டிருந்தார்.

காது கூட இருக்கு
இந்நிலையில் அவரது டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டியுள்ள இயக்குநர் சேரன் டிவிட்டருக்கு கூட காது உள்ளது போல என கடந்த வாரம் பேசிய நிலையில் இன்று அது நடந்து விட்டது என கூறியுள்ளார்.

காது உண்டு
இதுதொடர்பான அவரது பதிவில் போன வாரம் தான் இந்த டாப்பிக் ஓடுச்சு... கொடுத்துட்டாங்க புளூ டிக்... ஹாஹா... நம்ம பேசுறதெல்லாம் கேக்கும் போல... ட்விட்டருக்கும் காது உண்டு.. அல்லது ட்விட்டருக்கு தமிழ் தெரியும்.. என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து
இதனை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் சேரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த ரசிகர், ஆச்சர்யமாகவும் இருக்கு
மகிழ்ச்சியாகவும் இருக்கு சார். நீங்கள் விண்ணப்பிக்காமலே
டிவிட்டர் உங்களுக்கு புளூ டிக் கொடுத்தது. புளூ டிக் பிரபலங்கள் வரிசையில் நீங்களும் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் சார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











