வெற்றிமாறன் - சூரி படத்தின் கதை... நான் கிடப்பில் போட்ட பாரசீக ரோஜா கதை போன்றது.. சேரன் பேட்டி!

சென்னை : வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க வருகிறார்.

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவு கூடியுள்ள நிலையில் வாடிவாசல் அப்டேட்க்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் அளித்த பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் சூரி இணையும் திரைப்படத்தின் கதை என்னுடைய கதை போன்றது என கூறியுள்ளார்

குடும்பப்பாங்கான கதை

குடும்பப்பாங்கான கதை

தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கக்கூடிய குடும்பப்பாங்கான கதைகளை தொடர்ந்து இயக்கி தமிழ் ரசிகர்களிடம் தனி மதிப்பு பெற்ற இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சேரன் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததையடுத்து சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.

அதிகாரப்பூர்வத்தகவல்

அதிகாரப்பூர்வத்தகவல்

தமிழ் மண் வாசனை மாறாமல் உருவாகும் கதைகளுக்குப் பெயர் போன இயக்குனர் சேரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருந்த "ராஜாவுக்கு செக் " திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது அதைத்தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் படத்தையும் இயக்க உள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரசீக ரோஜா

பாரசீக ரோஜா

இந்த நிலையில் சமீபத்தில் சேரன் கொடுத்த பேட்டி ஒன்றில் சூரி கதாநாயகனாக அவதாரமெடுக்கும் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் கதை எனது கதை போன்றது என கூறியுள்ளார். 1990 களில் தொடர் வெற்றி திரைப் படங்களின் மூலம் பல விருதுகளை வென்ற இயக்குனர் சேரன் "பாரசீக ரோஜா" என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

அதற்கு பதிலாக தேசியகீதம்

அதற்கு பதிலாக தேசியகீதம்

அரபு நாடுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் அங்கு எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் எந்த மாதிரி எல்லாம் இன்னல்களை சந்திக்கின்றார்கள் என்பதை மையமாகக் கொண்டு உருவாக இருந்த பாரசீக ரோஜா படம் பட்ஜெட் காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது அதற்கு பதிலாக தேசியகீதம் திரைப்படம் உருவானதாக கூறி இருந்தார்.

தாராளமாக அழைக்கலாம்

தாராளமாக அழைக்கலாம்

இயக்குனர் வெற்றிமாறன் சூரி இணையும் புதிய திரைப்படத்தின் கதையும் தமிழ் நாட்டில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் ஒரு இளைஞரின் கதையை மையமாகக் கொண்டது. இதை அறிந்த நான் வெற்றிமாறனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கதை எனது "பாரசீக ரோஜா" திரைப்படத்தின் கதையைப் போன்று உங்களது, எனவே உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கதை விவாதத்தில் எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் என்னை தாராளமாக அழைக்கலாம் என கூறியதாகவும் அதன்படி சில முறை கதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சேரன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X