twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் நண்பரை இழந்த இயக்குநர் சேரன்.. கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியவில்லை என உருக்கம்!

    |

    சென்னை: கொரோனாவுக்கு 25 ஆண்டு கால நண்பரை பறிகொடுத்து விட்டதாக இயக்குநர் சேரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

    தமிழகத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    மீண்டும் தனுஷை இயக்குகிறாரா வெற்றிமாறன்? தீயாய் பரவும் தகவல்! மீண்டும் தனுஷை இயக்குகிறாரா வெற்றிமாறன்? தீயாய் பரவும் தகவல்!

    கொரோனாவுக்கு பலி

    கொரோனாவுக்கு பலி

    இந்நிலையில் இயக்குநர் சேரனின் நண்பர் ஒருவரும் கொரோனா வைரஸ்க்கு பலியாகி இருக்கிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் இயக்குநர் சேரன். அவரது பதிவை பாரத்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

    அவர் முகம் கூட..

    அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னோடு 25 வருடங்களாக பயணித்த நண்பர். எல்லா வசதிகளும் இருந்தாலும் எளிமையாய் மனிதர்களின் மனதை நேசிக்க தெரிந்தவர். சிறு துயர் என்னை சூழ்ந்தாலும் அருகில் நிழலாய் இருப்பார். நேற்று திடுக்கிடும் செய்தி.. கொரோனாவில் அவர்.. அவர் முகம் கூட... என்ன கொடுமையான வாழ்க்கைக்குள் இருக்கிறோம்..

    லாக்டவுன்ல பிரியாணி..

    கடைசியாக அவரிடம் பேசியது.. இப்போ எதுக்கு இந்த லாக்டவுன்ல பிரியாணிலாம் அனுப்புறீங்க வேணாமேன்னு சொல்ல " இப்போதான் சார் கொடுக்கனும்.. நிறைய பேர் ஹோட்டல்கள் இல்லாம சாப்பிட முடியாம இருக்காங்க.. அவங்க எல்லாரும் சாப்பிடட்டும்னு மூணு மடங்கா செஞ்சிருக்கேன்னு சொன்னீங்களே.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஷாம் சார் என பதிவிட்டுள்ளார்.

    மனைவி மரணம்

    அவர் இந்த பதிவை பார்த்த நடிகர் பிரசன்னா, மேலும் ஒரு சோக செய்தியை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அவர் இல்லாததை ஏற்க முடியவில்லை. அவர் மனைவி மாரடைப்பால் இறந்து மூன்றே வாரங்களில்...இவரும் ..என் வீட்டு விசேஷங்களிலெல்லாம் தவறாமல் பங்கேற்று மகிழ்வித்த நண்பர்..நானும் கடைசியாய் பேசியது ரம்ஜான் வாழ்த்து சொன்னபோதுதான். இறையடி சேர்ந்திருக்க பிரார்த்தனைகள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Cheran lost his friend for Corona. He shares his heartfelt last speech with him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X