அழகு.. அம்சமான போஸ்.. அரவிந்த் சாமியின் எம்ஜிஆர் லுக்கை பார்த்து மிரண்டுபோன இயக்குநர்!

சென்னை: அரவிந்த் சாமியின் எம்ஜிஆர் லுக்கை பார்த்து அசந்து போயுள்ளார் பிரபல இயக்குநர்.

கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சைவம், இது என்ன மாயம், தலைவா,தேவி, லக்ஷ்மி, தேவி 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏஎல் விஜய்.

தற்பேது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

5 மொழிகளில் ரிலீஸ் ஆகும்

5 மொழிகளில் ரிலீஸ் ஆகும்

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவி படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரிலீஸ் ஆகிறது. தலைவி படம் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

திரையரங்கில்தான் ரிலீஸ்

திரையரங்கில்தான் ரிலீஸ்

ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தப் படம் தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து தலைவி படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் பரவியது. ஆனால் அதனை மறுத்த படக்குழு என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது.

செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸ்

செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸ்

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் நேற்று வெளியானது. அதன்படி தலைவி படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேஸான்

நெட்பிளிக்ஸ் மற்றும் அமேஸான்

திரையரங்குகளில் வெளியான பிறகு தலைவி படம் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. தலைவியின் இந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் பதிப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கால படங்களில்..

ஆரம்ப கால படங்களில்..

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நடிகை கங்கனா ரனாவத் உடல் எடையை அதிகரித்திருந்தார். படத்தில் நடித்துள்ள கேரக்டர்களின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா ஆரம்ப கால படங்களில் இருந்தது போன்ற லுக்கில் அசத்தினார் கங்கனா ரனாவத்.

பொறுத்தமான நடிகர் அரவிந்த் சாமிதான்

பொறுத்தமான நடிகர் அரவிந்த் சாமிதான்

எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். உடல் மொழி, பாவனை, பார்வை என அத்தனையும் எம்ஜிஆரின் தோரணையில் ஆஹா போட வைத்தார் அரவிந்த் சாமி. தொப்பி, கண்ணாடி, மேனரிஸம் என எம்ஜிஆராகவே இருந்த அரவிந்த் சாமியை பார்த்த ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க பொறுத்தமான நடிகர் அரவிந்த் சாமிதான் என கூறி வந்தனர்.

இயக்குநர் சேரன் புகழாரம்

இயக்குநர் சேரன் புகழாரம்

இந்நிலையில் பிரபல இயக்குநரான சேரன் அரவிந்த் சாமியின் எம்ஜிஆர் லுக்கை பார்த்து பிரமித்து போயுள்ளார். அரவிந்த் சாமி எம்ஜிஆர் கெட்டப்பில் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ள சேரன், பியூட்டிஃபுல் அன்ட் பர்ஃபெக்ட் போஸ் சார் என பாராட்டியுள்ளார். மேலும் உங்களை எம்ஜிஆராக பார்க்க காத்திருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X