“உங்க பித்தை தெளிய வைத்தே ஆகணும்”.. திட்டிய பார்த்திபனுக்கு சூப்பரா மூணு மருந்து சொன்ன சேரன்!

பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்குனர் சேரன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Recommended Video

Cheran Parthiban Fight on Twitter : சமூகவலைத்தளத்தில் சண்டை போட்ட சேரன், பார்த்திபன்-வீடியோ

சென்னை: பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் சூப்பராக ஒரு டிவீட் போட்டுள்ளார்.

இயக்குனர் பார்த்திபன் ஒற்றை ஆளாக நடித்து, தயாரித்து, இயக்கிய படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் பெற்றது படம்.

இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ளதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தை பார்த்து பாராட்டினார். இந்நிலையில் ஒத்த செருப்பு படத்தை சேரன் பார்த்துவிட்டு, அதுகுறித்து டிவீட் செய்துள்ளார்.

பார்த்திபனுக்கு பாராட்டு

அதில் இயக்குனர் பார்த்திபனை பாராட்டும் வகையில், "நீங்கள் திரைத்துறையில் அறிமுகமாகி சரியாக 30 வருடங்கள். இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன். பெருமிதம் கொள்கிறேன் உங்களோடு என் முதல் பயணம் துவங்கியதில்", குறிப்பிட்டுள்ளார்.

சினிமா கிறுக்கன்

சினிமா கிறுக்கன்

மேலும், "நீங்கள் ஒத்த ஆளா கிறுக்கிய கவிதை நீங்கள் இன்னும் சினிமா கிறுக்கனாகத்தான் இருக்கிறீர்கள் எனப் பறைசாற்றியது. இந்த பித்தை தெளியவைக்க உங்களுக்குக் கீழ்க்கண்ட மருந்துகள் கொடுக்க வேண்டும். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது - 1, சிறந்த நடிகருக்கான தேசிய விருது - 1 காந்திபடம் போட்ட கரன்சி - 1000 மூட்டைகள் (2000 ரூபாய் நோட்டாக)

நல்ல கிறுக்கல்கள்

நல்ல கிறுக்கல்கள்

இதெல்லாம் இவருக்குக் கொடுத்தால் அவரது நோய் இன்னும் பலமடங்காகி இன்னும் நல்ல கிறுக்கல்கள் வரும். ஹேட்ஸ் ஆஃப் சார். பாடல்களும் பேரிரைச்சல்களும் உதவாத சண்டைக்காட்சிகளிலுமாய் இன்னும் மூழ்கி கிடக்கும் தமிழ் சினிமா சந்தையில் ஒற்றை ஆளாய் உங்கள் மு(அ)கத்தை மட்டும் காண்பித்து இரண்டு மணி நேரம் கட்டிப்போடுவதென்பது அசாத்திய முயற்சி", என பார்த்திபனை சேரன் பாராட்டியுள்ளார்.

பார்த்திபன் நன்றி

சேரனின் பாராட்டுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். " உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது. நன்றி", என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சேரனின் முதல் படமான பாரதி கண்ணம்மாவில் பார்த்திபன் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் பேட்டி

பார்த்திபன் பேட்டி

சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரைக் கடுமையாக விமர்சித்து பார்த்திபன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். ஒத்த செருப்பு பட புரொமோசனுக்காக பேசிய பேட்டியில் தான் அவர் சேரனைப் பற்றி அப்படி பேசியிருந்தார். எனவே சேரன் வெளியில் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாராட்டு

பாராட்டு

ஆனால், அதற்கு மாறாக பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பாராட்டி சேரன் டிவீட் வெளியிட்டிருப்பது மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது தான் சேரன் குணம் என சேரனின் இந்த போக்கை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியால் சேரனுக்கு ஆர்மியெல்லாம் உருவாகி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X