ரஜினியை பாராட்டிய இயக்குநர் சேரன்.. கிடுக்கிப்பிடி கேள்விக் கேட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலேயே விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ண போவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது இயக்கத்தில் வெளியேன பொற்காலம் படம் நேற்று முன்தினம் 23வது பிறந்தநாளை கொண்டாடியது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் டிவிட்டரில் வாழ்த்து கூறினர்.
தங்கச்சங்கிலி
பொற்காலம் படத்தை பாராட்டியும் டிவிட்டுகள் குவிந்தன. இந்நிலையில் ரசிகர் ஒருவர்,பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொற்காலம். இந்த பொற்காலம் படத்தின் 100வது நாள் விழாவில் ரஜினிகாந்த் சார் அவர்கள் உங்களை பாராட்டி உங்களுக்கு தங்க சங்கிலி பரிசு அளித்தார் என்பதை நினைவு கூர்ந்தார்.
உயர்ந்த உள்ளம் படைத்தவர்
அந்த ரசிகரின் டிவிட்டுக்கு பதிலளித்த சேரன், மறக்கமுடியாத நிகழ்வு.. சூப்பர்ஸ்டார் அவர்கள் என்னை அவரது அருனாச்சலம் படவிழாவில் அழைத்து தங்கசங்கிலி பரிசாக அளித்தார்.. அன்றிலிருந்து இன்றுவரை என்மேல் பாசம்காட்டும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்.. என பாராட்டியிருக்கிறார்.
இருக்க வேண்டாமா?
சேரனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், இதுதான் ரஜினியின் மனசு. ஒரு ரசிகனா எங்களுக்கு இவ்வளவு பெருமையா இருக்ககே, நீங்கள் அவருக்கு எங்கேயும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டாமா என கேட்டுள்ளனர்.
வெல்ல வேண்டும்
தங்கத்தலைவருக்கு ஆதரவு தரலைனாலும் பரவாயில்லை அவருக்கு எதிராக நின்று விடாதீர்கள். நல்லவர் இலட்சியம் வெல்ல வேண்டும் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நெட்டிசன்கள் கேள்வி
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, அரசியல் உங்களுக்கு ஒத்து வருமா என கேட்டிருந்தார் சேரன். இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை மனதில் வைத்தே நெட்டிசன்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











