திரைப்படம் பார்க்கத்தூண்டும் ட்ரெயிலர்.. சார்பட்டா பரம்பரையை பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியான நிலையில் திரைப்படத்தை பார்க்க தூண்டும் ட்ரெயிலர் என பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார்.
Recommended Video
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் பா ரஞ்சித்.
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை.

நேற்று வெளியான ட்ரெயிலர்
பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது.

பரபரப்பும் விறுவிறுப்பும்
நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த ட்ரெயிலரை வெளியிட்டார். பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுடன் காவியமாக இருந்தது இதன் ட்ரெயிலர்.

இயக்குநர் சேரன் பாராட்டு
இதனை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பா ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யாவின் உழைப்பை பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சேரன் சார்பட்ட பரம்பரை ட்ரெயிலரை பாராட்டி தள்ளியுள்ளார்.

பார்க்கத் தூண்டும் ட்ரெயிலர்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, நம்பிக்கையூட்டும், திரைப்படம் பார்க்கத்தூண்டும் டிரெயிலர்.. ரஞ்சித் உங்கள் உழைப்பிற்கான வெற்றி உங்களை வந்தடையும்.. வாழ்த்துக்கள்.. ஆர்யா, கலையரசன், அனுபமா குமார் மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











