துணியின்றி நிர்வாணமாக நடித்த நடிகை.. அதுக்கெல்லாம் தைரியம் வேணும்.. பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: ராஜாவுக்கு செக் படத்தில் துணியின்றி நடித்ததற்காக நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ராஜாவுக்கு செக். இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீஸானது.
இந்தப் படத்தில் சேரனுக்கு சராயூ மோகன், நந்தனா வர்மா நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

நல்ல விமர்சனம்
ஜெயம் ரவி- ஷ்ரேயா நடிப்பில் வெளியான மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் ராஜாவுக்கு செக் படத்தை இயக்கியுள்ளார். பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நல்லவிதமான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

பிரபலங்கள் பாராட்டு
பிரபலங்கள் பலரும் ராஜாவுக்கு செக் படத்தை பாராட்டி வருகின்றனர். படம் குறித்த தகவல்களை சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதேபோல் படத்தை பாராட்டி பதியப்படும் டிவிட்டுகளையும் இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து வருகிறார். படத்தை பாராட்டுபவர்களுக்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறி வருகிறார்.
நிர்வாணமாக
இந்நிலையில் ராஜாவுக்கு செக் படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நிர்வாணமாக நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார் சேரன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.. ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும்.. அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும்.. இப்படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது.. மிக்க நன்றி.. ஸ்ருஷ்டி டாங்கே என்று கூறியிருக்கிறார்.
சந்தேகமே..
சேரனின் இந்த டிவிட்டை பார்த்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு நன்றி கூறியுள்ளார். அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துள்ளனர். நான் அந்த காட்சி பார்க்கும் போது ஒரு குழந்தையை பார்க்கும் வேதனையான தந்தையாக உணர்ந்தேன் இந்த காட்சியை ஆபாசம் என்று சொல்பவன் கண்டிப்பாக யோக்கியன் என்பது சந்தேகமே? நன்றி என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











