க/பெ ரணசிங்கம்.. 2 பேரும் மிரட்டியிருக்காங்க.. புழுதி வாசனை நுகர்ந்தேன்.. பிரபல இயக்குநர் புகழாரம்!

சென்னை: க/பெ ரணசிங்கம் படத்தின் டீசரை பார்த்த பிரபல இயக்குநர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுதான் என்ற கட்டுப்பாடில்லாமல் வில்லன் கேரக்டரிலும் அசத்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

அவரைப் போலவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அசாத்திய நடிப்பு திறமையை கொண்டவர். திருமணமான பெண், தங்கை, தாய், ஹீரோயின் என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் செவ்வனே பொருந்தி சிறப்பாய் நடித்து வருகிறார்.

இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

ஏற்கனவே விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, தர்மதுரை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இணைந்து நடித்த இடம் பொருள் ஏவல் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

கேஜேஆர் ஸ்டுடியோஸ்

கேஜேஆர் ஸ்டுடியோஸ்

இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விருமாண்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

படத்தின் டீசர்

படத்தின் டீசர்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மிரட்டிருக்காங்க

மிரட்டிருக்காங்க

டீசரை பார்த்த இயக்குநர் சேரன், டிவிட்டரில் மனதார பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், க/பெ ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம்.. விஜய்சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேசும் மிரட்டி எடுத்திருக்காங்க.. புதிய அறிமுகம் இயக்குனர் தம்பி விருமாண்டிக்கு வாழ்த்துக்கள். கிராமத்தின் புழுதி வாசனை நுகர்ந்தேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X