உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா... கண்ணதாசன் பிறந்த நாளில் சேரன் உருக்கம்!
சென்னை: கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

கவிஞர் கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு கண்ணதாசனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பலரும் கண்ணதாசனின் பாடல் வரிகளை குறிப்பிட்டு எந்த நிலையிலும் உங்களுக்கு மரணமில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, கடலளவு வந்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா...
உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா...
ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த புரிதல் வந்துவிட்டால் வாழ்தல் எளிதாகிவிடும்..
கண்ணதாசன் சகாப்தம்.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











