twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபேமிலிமேன் 2 விவகாரம்.. நேர்காணல்களுக்கு சப் டைட்டில் போடுங்க.. பிரபல இயக்குநர் வேண்டுகோள்!

    |

    சென்னை: தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் தொடர்பான நேர்காணல்களுக்கு சப் டைட்டில் போடுமாறு பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Recommended Video

    Family Man 2 | Episode 02 review Tamil | Talking 2 Much | Filmibeat Tamil

    அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

    தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா தளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா

    ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸன் வெளியாகியுள்ளது.

    தி ஃபேமிலி மேன் 2

    தி ஃபேமிலி மேன் 2

    ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீஸனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோரே இரண்டாவது சீஸனையும் இயக்கியுள்ளனர்.

    தவறாக சித்தரித்து..

    தவறாக சித்தரித்து..

    இதில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத்தொடரில் இலங்கை தமிழ் போராளிக்குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

    தடை செய்ய கோரிக்கை

    தடை செய்ய கோரிக்கை

    இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டியுள்ள இயக்குநர் சேரன், ஃபேமிலிமேன் வெப்சீரிஸ் தொடர்பான நேர்க்காணல்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுமாறு கூறியுள்ளார்.

    சப் டைட்டில் கொடுத்தால்

    சப் டைட்டில் கொடுத்தால்

    இதுதொடர்பான அவரது டிவிட்டில், சில செய்தி ஊடகங்களின் பெயர்களை குறிப்பிட்டு familyman 2 க்கு எதிரான நேர்காணல்கள் ஆங்கிலத்தில் subtitle செய்து பதிவிட்டால் உங்கள் அனைவரின் ஆழமான கருத்துக்கள் அந்த தொடர் எடுத்தவர்களுக்கு சென்றடையும்.. நன்றி என கூறியுள்ளார்.

    தவறாக நினைக்க வேண்டாம்

    தவறாக நினைக்க வேண்டாம்

    மற்றொரு பதிவில் இன்னும் யாரெல்லாம் அந்த தொடருக்கு எதிரான கருத்துக்களை பேசியிருக்கிறார்களோ அவர்களும் இந்த முயற்சி எடுக்கலாம். நான் பார்த்தவரை குறிப்பிட்டுள்ளேன்.. தவறாக நினைக்க வேண்டாம்.. நமது கருத்துக்கள் அவர்களை சென்றடைவதே நம் நோக்கம்.. உடனடியாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. என கூறியுள்ளார்.

    Read more about: cheran சேரன்
    English summary
    Director Cheran request sub title for the interviews against the family man 2 webseries. Tamil Cinema celebrities condemns for The familyman 2 web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X