twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் திரைத்துறைக்கும் தனி ஓடிடி தளம் அவசியம்… சேரன் கோரிக்கை !

    |

    சென்னை : தமிழ் திரைத்துறைக்கு தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் என இயக்குனர் சேரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதனால், சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவுகாலம் பிறக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், அரசுக்கு வருங்காலத்தில் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்,

    படங்கள் ஒடிடியில் வெளியாகின

    படங்கள் ஒடிடியில் வெளியாகின

    கொரோனாவுக்கு முன்பாக நாம் அறியாத ஒன்றாக இருந்த ஓடிடி தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு திரைத்துறை பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய, பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் ஒடிடியில் வெளியாகி வருகின்றன.

    ஒடிடியில்

    ஒடிடியில்

    அந்த வகையில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், பென்குயின், பொன்மகள் வந்தால், சூரரைப்போற்று, பூமி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களு ம் ஒடிடியில் வெளியாகின. இறுதியாக தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் ஒடிடியில் வெளியானது.

    பிரத்யேக ஓடிடி தளம்

    பிரத்யேக ஓடிடி தளம்

    ஒடிடி தளங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரவேற்பால் கேரள அரசு மலையாள திரைத்துறைக்கென பிரத்யேகமாக ஒடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளன. இந்த ஒடிடி தளம் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    தனி ஓடிடி தளம்

    தனி ஓடிடி தளம்

    இந்நிலையில், கேரள அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள சேரன், இதேபோன்று நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் ஒரு ஒடிடி தளம் அவசியம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவுகாலம். அரசுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம், தமிழ் மொழிக்கென தனி ஒடிடி தளம் அவசியம் என சேரன் அதில் கூறியுள்ளார்.

    English summary
    Director Cheran request to Tamil government for OTT Platform
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X