twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனால் மோசமான பாதிப்பில் சினிமா.. நிலைமை சீராகும் வரை.. இயக்குனர் சேரன் அரசுக்கு கோரிக்கை!

    By
    |

    சென்னை: சினிமா படப்பிடிப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சேரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Recommended Video

    வாழும் சிவாஜி | Sivaji Anthony | Rewind Raja EP-02 | FILMIBEAT TAMIL

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டன.

    சினிமா தியேட்டர்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

    மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடிக்கிறாரா? வெளியான வைரல் புகைப்படம்!!மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடிக்கிறாரா? வெளியான வைரல் புகைப்படம்!!

    அனுமதி வேண்டும்

    அனுமதி வேண்டும்

    இந்நிலையில் ஊரடங்கு ஐந்து மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அதில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளன. அதன்படி கடந்த மாதம் முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கியது.

    ரகுல் பிரீத் சிங்

    ரகுல் பிரீத் சிங்

    ஒரு சில சினிமா படங்களின் ஷூட்டிங் மும்பை மற்றும் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. சுதீப் நடிக்கும் பாண்டம் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. ரகுல் பிரீத் சிங் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி இருக்கிறது. கே.ஜி.எஃப் சாப்டர் 2 பட ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

    வழிகாட்டு நெறிமுறை

    வழிகாட்டு நெறிமுறை

    இந்நிலையில் மத்திய அரசு, சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து, மாஸ்க், கையுறை அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். இதனால், தமிழக அரசும் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் சேரன்

    இயக்குநர் சேரன்

    இதற்கிடையே தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தமிழக முதல்வர் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரையும் டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், திரைத்துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும், 70% சிறு படத்தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்பின் அனுமதிக்கான செலவுகளையும், வரிச்சலுகைகளையும் நிலைமை சீராகும் வரை முற்றிலுமாக நீக்கித்தருமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Cheran request Tamilnadu Government that the costs and tax concessions for the shooting permit be eliminated until the situation improves.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X