ரசிகர் கேட்ட கேள்வி.. சிரித்து மழுப்பிய சேரன்.. எகிறிய எதிர்பார்ப்பு.. என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் சேரன் கூறிய பதிலால் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் ஆட்டோகிராஃப். இந்தப் படத்தை இயக்குநர் சேரனே இயக்கி தயாரித்திருந்தார்.

இப்படத்தில் கோபிக்கா, ஸ்னேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் மனிதன் தனது ஒவ்வொரு பருவத்திலும் சந்திக்கும் காதலை அற்புதமாக திரையிட்டு காட்டியிருப்பார் சேரன்.

விருதுகளை குவித்த ஆட்டோ கிராப்

விருதுகளை குவித்த ஆட்டோ கிராப்

ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை தொடும் வகையில் இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராஃப் படம் 3 தேசிய விருதுகளை குவித்தது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் வருதுகளையும் அள்ளியது ஆட்டோகிராஃப்.

நிச்சயமாக வரும்

நிச்சயமாக வரும்

இதனை தொடர்ந்து ஆட்டோகிராப் பார்ட் 2 வருமா என காத்திருந்தனர் ரசிகர்கள். மேலும் கடந்த ஆண்டு ஒரு ரசிகர் ஒரு சேரனின் டிவிட்டர் பக்கத்தில் ஆட்டோகிராஃப் 2 வருமா என கேட்டார் அதற்கு நிச்சயமாக வரும் என பதில் அளித்தார் சேரன். ஆனால் அதன் பிறகு பேச்சே இல்லை.

பாராட்டி தீர்த்தனர்

பாராட்டி தீர்த்தனர்

இந்நிலையில் நேற்று ஜெயா டிவியில் ஆட்டோகிராஃப் படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இயக்குநர் சேரனையும் அவரது படைப்பையும் பாராட்டி தீர்த்தனர். பாராட்டியவர்களுக்கு எல்லாம் நன்றி கூறினார் இயக்குநர் சேரன்.

அப்படி சொல்லிருக்கலாமே

அப்படி சொல்லிருக்கலாமே

அந்த வகையில் ஒரு ரசிகர், சிறந்த படம் மீண்டும் மீண்டும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சந்தோஷமான முடிவு, நானும் இருபது தடவைக்கும் மேல பார்த்திருப்பேன்.ஒவ்வொரு தடவையும் வந்ததுக்கு நன்றி'ன்னு மட்டும் சொல்றீங்க. சாப்பிட்டு தான் போகணும்னு சொல்லி இருக்கலாம் இல்ல சார் என கேட்டு க்ளைமேக்ஸில் சேரன் ஆடியன்ஸ்க்காக பேசும் காட்சியையும் ஷேர் செய்திருந்தார்.

அப்படியே ஆரம்பிக்கலாம்

அப்படியே ஆரம்பிக்கலாம்

ரசிகரின் அந்த பதிவை பார்த்த இயக்குநர் சேரன், ஹாஹா என சிரித்து நல்ல கேள்வி.. அடுத்த ஆட்டோகிராஃப் சாப்பாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்... நன்றி இருபது தடவைக்கு மேல பார்த்ததுக்கு என பதில் தெரிவித்திருக்கிறார்.

காத்திருக்கிறோம்

காத்திருக்கிறோம்

சேரனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆட்டோகிராஃப் பார்ட் 2க்கு காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பொறுப்புணர்வையும் நேர்மையையும் பார்த்து பலரும் அவருக்கு ரசிகரானது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X