என் பலமே அம்மா தான்.. தாயாரை இழந்து உடைந்துபோன இயக்குநர் சேரன்!
சென்னை : இயக்குநரும் நடிகருமான சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் சற்று முன் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுச் செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் சேரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இயக்குநர் சேரன்: மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சேரனுக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், ஒரு சில நாடகங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, சென்னை வந்த சேரன், கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய புரியாத புதிர் படத்தில் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பின், சேரன் பாண்டியன், நாட்டாமை, மகாநதி போன்ற படங்களில் பணியாற்றி தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

3 தேசிய விருதுகள்: அதன் இயக்குநராக, பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து அதைத் தொடர்ந்து பொற்காலம் வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி போன்ற படங்களை இயக்கி 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இயக்குநராக இருந்த சேரன் சொல்ல மறந்த கதை படத்தில் கதாநாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார். சேரனுக்கு தற்போது பட வாய்ப்பு எதுவும் சரியாக இல்லாததால் மன வேதனையும் பேட்டியில் பேசி இருந்தார்.
தாயார் மரணம்: இந்நிலையில் சேரனின் தாயார் இன்று உயிரிழந்தார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்குகள் நாளை, சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் நடைபெற உள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து சேரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். வருகின்றனர்.


Click it and Unblock the Notifications