கட்டிப்பிடிக்க சென்ற மீரா.. மிரண்டு போன சேரன்.. சந்தில் சினேகனுக்கும் லந்து!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நியூ என்ட்ரியான மீரா மிதுன் கட்டிப்பிடிக்க சென்றபோது அய்யோ அம்மா என்னது இது என மிரண்டார் சேரன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு சுவாரசியமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவாக மீரா மிதுன் வந்துள்ளார்.
அவர் வருகை அபிராமிக்கும் சாக்ஷிக்கும் அரவே பிடிக்கவில்லை. இப்போதே அவரை எப்படி துரத்தலாம் என திட்டம் போடத் தொடங்கிவிட்டனர்.

முயற்சிக்கும் மீரா
இந்நிலையில் ஹவுஸ் மேட்ஸை திருப்திபடுத்தி அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்குமாறு ஒரு டாஸ்க்கை மீராவுக்கு கொடுக்கிறார் பிக்பாஸ். இதைத்தொடர்ந்து ஒவ்வொரிடமும் சென்று அவர்களை திருப்தி படுத்த முயற்சிக்கிறார் மீரா.

சம்மதித்த ஹவுஸ் மேட்ஸ்
ஒவ்வொருவரை பற்றியும் அவர்களின் ஹிஸ்டரி குறித்தும் பேசும்போது ஹவுஸ் மேட்ஸ் சில டாஸ்க்கை கொடுத்தனர். டாஸ்க்கை செய்து முடித்ததும் வீட்டில் தங்க சம்மதித்தனர்.

சம்மதிக்கவில்லை
ஆனால் அபிராமியும் சாக்ஷியும் மீரா டாஸ்க்கை செய்யவும் ஒத்துழைக்கவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் சம்மதிக்கவில்லை.

கட்டிப்பிடிக்க சென்ற மீரா
இதைத்தொடர்ந்து இயக்குநர் சேரனிடம் சென்றார் மீரா. அப்போது அவரை கட்டிப்பிடிக்க சென்றதால் மிரண்டு போனார் சேரன். என்னமா இது என சேரன் கேட்க, கட்டிப்பிடி வைத்தியம் கமல் சார் கூட கூறியிருக்கிறார் என்றார் மீரா.

சினேகன் கூறினார்
வேண்டாம் என்று மறுத்த சேரன் கட்டிப்பிடி வைத்தியம் கமல் சார் கூறவில்லை, அது சினேகன் கூறியது என நமட்டு சிரிப்பு சிரித்தார். ஆயிரம் இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்யா..!!


Click it and Unblock the Notifications











