எல்லாம் லாக்டவுன் எஃபெக்ட்டா.. நீண்ட முடி.. முகம் முழுக்க தாடி.. சேரப்பா ஆளே வேற மாதிரி இருக்காறே!
சென்னை: இயக்குநர் சேரனின் நியூ லுக் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சேரன். பல குடும்பச்சித்திரங்களை இயக்கியுள்ள இவர், தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பல படங்களில் நடித்துள்ளார் இயக்குநர் சேரன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் திருமணம்.

ரசிகர்கள் ஆதரவு
இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் நியூட்ரலாகவும் இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றார்.

சேரப்பா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, இயக்குநர் சேரன் தன்னுடைய அப்பாவை போன்றே இருப்பதாக கூறி அவரை சேரப்பா சேரப்பா என்றழைத்தார். இதனால் தமிழ் ரசிகர்களும் இயக்குநர் சேரனை சேரப்பா என்று அழைக்க தொடங்கினர்.

நீண்ட முடி.. தாடி..
இந்நிலையில் இயக்குநர் சேரன், புதிய கெட்டப்பில் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தலை நிறைய நீண்ட முடி, முகம் முழுக்க தாடி என ஆளே வேறு மாதிரியாக உள்ளார். எடையும் கொஞ்சம் கூடி அடையாளம் தெரியாதப்படி உள்ளார்.

களத்தில் இறங்கலாம்
மேலும் அந்தப் போட்டோவுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு... எவ்வளவு சுகமா இருக்கு.. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்.. இது எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம்.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

லாக்டவுன் எஃபெக்ட்டா..
இயக்குநர் சேரனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களின் இந்த பதிவு எங்களுக்குள் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என கூறியுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், லாக்டவுன் எஃபெக்ட்டா சார் முடி வெட்டாம, ஷேவ் பண்ணாம இருக்கீங்களே என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











