twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதற்கு அரசு என்ன செய்யும்? எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது? பிரபல இயக்குநர் காட்டம்!

    |

    சென்னை: தற்போது அமலில் உள்ள லாக்டவுனை கிண்டல் செய்த ரசிகருக்கு பிரபல இயக்குநர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

    ரம்ஜான் ட்ரீட்.. அமேசான் பிரைமில் வெளியானது கர்ணன்.. டிரெண்டாகும் #KarnanOnPrimeரம்ஜான் ட்ரீட்.. அமேசான் பிரைமில் வெளியானது கர்ணன்.. டிரெண்டாகும் #KarnanOnPrime

    ஆனால் ஊரடங்கு நேரத்திலும் மக்கள் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பாதி கதவுக்கு பூட்டு

    பாதி கதவுக்கு பூட்டு

    இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமிழகத்தில் தற்போதைய லாக்டவுன் இப்படித்தான் இருக்கிறது என பாதி கதவு உடைந்திருக்கும் நிலையில் பூட்டு போட்டிருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

    கடமையான நடவடிக்கை

    கடமையான நடவடிக்கை

    மேலும் இப்படியே போனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

    அரசு என்ன செய்யும்?

    அரசு என்ன செய்யும்?

    ரசிகரின் அந்த டிவிட்டை பார்த்த இயக்குநர் சேரன், இதற்கு அரசு என்ன செய்யும்.. அவ்வளவு தெளிவாக முதல்வர் உரையாற்றிய பின்னும் லாக்டவுனை மதிக்காமல் வெளியில் சுற்றும் மக்கள்தானே காரணம். கொரோனா பரவலை தடுப்பது மக்கள் கையில்தான் இருக்கு.. இந்த விழிப்புணர்வு இல்லாதவர்களால் எல்லோருக்கும் ஆபத்து.. என பதிலளித்துள்ளார்.

    நமக்காக பணி செய்பவர்கள்

    நமக்காக பணி செய்பவர்கள்

    மேலும் இதுவரை காவல்துறையில் மட்டும் 11 பேர்.. இது போல் முன்களப் பணியாளர்கள் இயங்கும் ஒவ்வொரு துறையிலும் நிறைய பேரை இழந்துகொண்டே இருக்கிறோம்.. நமக்காக பணி செய்ய வந்து அவர்கள் குடும்பம் இன்று சொல்ல முடியாத சோகத்தில் மூழ்குவது சரியா.. என்றும் காட்டமாக கேட்டுள்ளார் இயக்குநர் சேரன்.

    எத்தனை காலம் முடங்குவது?

    எத்தனை காலம் முடங்குவது?

    மேலும் சிந்தித்து அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொரோனா அறிகுறி தெரிந்தவுடனேயே சிகிச்சை எடுத்து உங்களையும் காப்பாற்றி உங்கள் குடும்பம் உங்களுக்காக பணிசெய்யும் அனைவரின் குடும்பங்களையும் காப்பாற்ற விழையுங்கள்.. இன்னும் எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது.. என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சேரன்.

    English summary
    Director Cheram slams people who unnecessarily roaming around during lock down. He request people to be responsible in this corona situation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X