twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் சரியாக நடித்தால்..பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.. சேரன் பேச்சு

    |

    சென்னை : நடிகர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு அவர்களை கொண்டு செல்வார்கள் என்று இயக்குனர் சேரன் கூறினார்.

    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் பெற்றுக் கொண்டனர்.

    Director Cheran speech actors should do the job properly

    தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால் தான் நன்றாக இருக்க முடியும் என்றார். நான் ஒரு எடிட்டர், தயாரிப்பாளர், நான் தயாரித்த படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது என்றார். இந்த விழாவில் நடிகை சர்மிளாவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

    பிக்பாஸ் புகழ் தர்ஷன் பேசும் போது, இந்த விழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரை உலகில் இருப்பவர்களுக்கு நிதி உதவி வழங்குவது சிறந்த விஷயம். இதில் நானும் இருப்பதை நினைக்கும் போது பெருமை கொள்கிறேன் என்றார். பத்திரிக்கையாளர்கள் தான் நடிகர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்றார்.

    இயக்குனர் சேரன் பேசும்போது, இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. படைப்புகளை முதலில் கணிப்பது பத்திரிக்கையாளர்கள் தான். இவர்களை பார்க்கும் போது எப்போதும் பயமாகவே இருக்கும். உதவி செய்யும் நோக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்விழாவில் உதவி செய்வது மகிழ்ச்சி என்றார். சர்மிளாவின் நிலைமை வருத்தமளிக்கிறது. கவனக்குறைவால் நிறையபேருக்கு இதுபோல் நடக்கிறது. இவருக்கு உதவி செய்வது ஊக்கம் தருவது போன்றது என்றார் சேரன்.

    Director Cheran speech actors should do the job properly

    பத்திரிக்கையாளர்கள் பிரிந்து இருப்பது காலத்தின் சூழல். அது அப்படி தான் சேரும் பிரியும். நான் இதுவரை 23 படங்கள் கடந்து வந்திருக்கிறேன். பாரதி கண்ணம்மா படத்தை கொண்டாடியது பாத்திரிக்கையாளர்கள் தான் என்றார். நடிகர்கள் தங்கள் பணியை சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்றார்.

    தற்போது நிறைய தொலைக்காட்சி சேனல்கள் பெருகி வருகின்றன. அதை கட்டுப்படுத்த வேண்டும். குறைய சொல்ல முடியாத அளவுக்கு படம் எடுக்க வேண்டும். நிறைய நல்ல படங்கள் காணாமல் போகிறது. எல்லா எழுத்துக்களிலும் கம்பீரம் இருக்க வேண்டும் என்றார்.

    நடிகை சர்மிளா பேசும்போது, "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் எனக்கு இன்று நல்ல வழி பிறந்திருக்கிறது. எங்கள் அப்பாவிற்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் இருந்தார்கள். ஒரு வரியில் செய்தியை சொல்லி அதன் மூலம் பத்திரிகையை வாங்க வைப்பது பெரிய விஷயம். நடிகர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள். எனக்கு உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    பின்னணி பாடகி பி.சுசிலா பேசும் போது, நான் இந்த விழாவிற்கு வர கவிதாதான் காரணம், எனக்கு என்ன பேசுறது தெரியல, பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்தது மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது என்னால் தமிழில் பேச முடிகிறது என்றார். விழாவில் "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை பாடினார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோரை சங்கத்தின் தலைவர் கவிதா வரவேற்று பேசினார்.

    Read more about: cheran சேரன்
    English summary
    Director Cheran speech actors should do the job properly
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X