twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் சீனாவின் திரைப்படங்களைக் கூட பார்ப்பதில்லை சார்.. நடிகர் பார்த்திபனுக்கு இயக்குநர் சேரன் பதில்!

    |

    சென்னை: தான் சீனாவின் திரைப்படங்களைக் கூட பார்ப்பதில்லை என நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு இயக்குநர் சேரன் பதில் தெரிவித்துள்ளார்.

    லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தினர்.

    இதனை தொடர்ந்து இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் ஒரு கர்னல் உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனியும் ஒருவர் ஆவார். சிலர் காயம் அடைந்தனர்.

    அது இல்ல, இதுதான்.. சீன மொழியில் தனுஷின் சூப்பர் ஹிட் படம்.. தயாரிப்பாளர் தாணு விளக்கம்! அது இல்ல, இதுதான்.. சீன மொழியில் தனுஷின் சூப்பர் ஹிட் படம்.. தயாரிப்பாளர் தாணு விளக்கம்!

    சீனாவுக்கு கண்டனம்

    சீனாவுக்கு கண்டனம்

    சீனா தரப்பில் 35 வீரர்கள் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு அரசு மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைத்துறையினரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பழனி + 19

    பழனி + 19

    அந்த வகையில் தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன், சீனாவின் இந்த சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் இந்திய ராணுவ வீரர் பழனி + 19 பேருக்கும் வீர வணக்கம் செலுத்தும் விதமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்! என்று தெரிவித்திருந்தார்.

    அருமை சார்..

    அருமை சார்..

    பார்த்திபனின் இந்த பதிவுக்கு இயக்குநர் சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டை பார்த்து பாராட்டியும் உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் சீனாவின் திரைப்படங்கள்கூட பார்ப்பதில்லை சார்.. Covid 19 போல பழனி+19... கற்பனையை காலத்தோடு பொருத்தியது அருமை சார்..
    எனது வணக்கங்களும் எம்மண்ணின் மைந்தனுக்கு.. என கூறியுள்ளார்.

    தரமில்லாத பொருட்கள்

    தரமில்லாத பொருட்கள்

    இருவரின் டிவிட்டையும் பார்த்த ரசிகர்கள், அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டி வருகின்றனர். அவர்களின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், சீனாவின் தரமில்லாத பொருட்களை வாங்கியே பழகிய மக்களே ஒருதரம் யோசித்து இனி நிரந்தரமாக நம்நாட்டு பொருளையே வாங்கி நம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவோம் என கூறியிருக்கிறார்.

    English summary
    Director Cheran supporting Actor Parthiban for his tweet on China. Cheran also praising Parthiban for his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X