twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டு வாடகையே கட்டமுடியாதவங்க எப்படி 3 மடங்கு மின் கட்டணத்தை கட்டுவாங்க? இயக்குனர் சேரன் கேள்வி!

    By
    |

    சென்னை: லாக்டவுனால் வாடகையே கட்டமுடியாதவர்கள், எங்கிருந்து மின்சார கட்டணத்தை இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? என்று இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Recommended Video

    Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

    கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    அவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. பலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் இருக்கிறது.

    'சிறந்த மனிதர், அவருடன் நடித்ததை மறக்க முடியாது..'அஜித்தை தாறுமாறாகப் புகழும் முன்னாள் ஹீரோயின்! 'சிறந்த மனிதர், அவருடன் நடித்ததை மறக்க முடியாது..'அஜித்தை தாறுமாறாகப் புகழும் முன்னாள் ஹீரோயின்!

    டாப்ஸி, ஹூமா குரேஸி

    டாப்ஸி, ஹூமா குரேஸி

    இந்நிலையில் மின்சார கட்டணம் ஒவ்வொருவருக்கும் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நடிகர், நடிகைகளும் இதே புகாரை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். நடிகர், பிரசன்னா இந்தப் பிரச்னையை ஆரம்பித்து வைத்தார். அடுத்து நடிகை கார்த்திகா, டாப்ஸி, ஹூமா குரேஸி உட்பட பலர் இதே புகாரை தெரிவித்தனர்.

    இயக்குனர் சேரன்

    இயக்குனர் சேரன்

    நடிகைகள், மும்பை நிலைமையை சொன்னாலும் தமிழகத்திலும் மின் கட்டணம் ஷாக்கடிப்பதாக இருக்கிறது. பலர் இதுபற்றி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி இயக்குனர் சேரன் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

    மூன்று மடங்கு

    மூன்று மடங்கு

    தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்). அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

    ஏழைகளை மிரட்டுகிறது

    ஏழைகளை மிரட்டுகிறது

    இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக. வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது.

    எப்படி கட்டமுடியும்?

    எப்படி கட்டமுடியும்?

    வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு''. இவ்வாறு இயக்குநர் சேரன் ட்விட்டரில் கூறியுள்ளார். இதை தமிழக முதல்வர் அலுவலகத்துக்கும் அவர் டேக் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்களும் தங்களுக்கு மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    Read more about: cheran சேரன்
    English summary
    Director cheran has requested to tamilnadu government to reduce the electricity bill
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X