பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சேரன் போட்ட முதல் ட்விட்! என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Recommended Video

Cheran about bigg boss| Cheran Tweet| Kavin Love

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இயக்குநர் சேரன் முதல் முறையாக டிவிட்டியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இயக்குநர் சேரன். மக்களின் நன் மதிப்பையும் செல்வாக்கையும் பெற்றார்.

ஹவுஸ்மேட்ஸ்களிடமும் ஒரு அப்பாவை போலவும் அண்ணனை போலவும்தான் பழகினார் சேரன். முதலில் சேரனை, தனது அப்பாவை போல் இருப்பதாக கூறி சேரப்பா என்றழைத்தார் லாஸ்லியா.

டஃப் கொடுத்த சேரன்

டஃப் கொடுத்த சேரன்

இதனை தொடர்ந்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் சேரப்பா என்றே குறிப்பிட்டனர். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களிலேயே மிகவும் நேர்மையாக இருந்தவர் சேரன்தான்.இளைஞர்களுக்கு இணையாக அனைத்து டாஸ்க்கிலும் மற்றவர்களுக்கு டஃப் கொடுத்தார் சேரன். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சேரன்.

சேரனுக்காகதான் பார்த்தோம்

சேரனுக்காகதான் பார்த்தோம்

பிக்பாஸ் வீட்டில் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்ட சேரன் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சேரன் வெளியேறியதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், இத்தனை நாள் பிக்பாஸ் பார்த்ததே சேரனுக்காகதான். அவரே வெளியே போன பிறகு இனி எதற்கு பிக்பாஸ் என டிவிட்டி வருகின்றனர்.

வென்றுவிட்டீர்கள்

வென்றுவிட்டீர்கள்

சேரன் வெளியேற்றப்பட்டதிலேயே நிகழ்ச்சியின் உண்மைத்தன்மை தெரிந்துவிட்டது. இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கபோவதில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் தோற்றாலும் மக்களின் இதயங்களை வென்றுவிட்டீர்கள் என ரசிகர்கள் டிவிட்டி வருகின்றனர்.

நீங்களே தலைசிறந்த மனிதர்கள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இயக்குநர் சேரன், முதல் முறையாக டிவிட்டியுள்ளர். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி. என பதிவிட்டிருக்கிறார்.

வைரலாகும் டிவிட்

வைரலாகும் டிவிட்

சேரனின் இந்த டிவிட்டை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் செய்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர். சேரனின் இந்த டிவிட் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X