அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்!
Recommended Video
சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் விமர்சிக்கும் நிலை அதிகரிப்பதற்கு இயக்குநர் சேரன் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிடிக்காத பிரபலங்கள் மற்றும் நபர்களை ஆபாசமாக சித்தரிப்பதும் கெட்ட வார்த்ததைகளால் திட்டுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் அதையும் மீறி சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் பிடிக்காதவர்களை அர்ச்சித்து வருவது தொடர் கதையாகதான் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் சேரன் சமூக வலைதளப் பக்கத்தில் டிவிட்டியிருக்கிறார்.
வன்மையாக கண்டிக்கிறோம்
அதாவது, ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளதோடு #CheranFansAgainstCyberBullying என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்துள்ளார்.

கவின் லாஸ் காதல்
அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன், சகபோட்டியாளர்களான கவின் லாஸ்லியா காதலை வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதனால் கடுப்பான கவின், சேரன் தங்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து அவர் யார் நம் காதல் விஷயத்தில் தலையிட என லாஸ்லியாவிடம் பேசினார்.

உச்சரிக்காது
இதனால் கவின் ரசிகர்களும் கோபப்பட்டு சேரனை தகாத வார்த்ததைகளால் அவரது டிவிட்டர் பக்கத்தில் திட்டி தீர்த்தனர். கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களின் பேச்சால் நொந்துபோன சேரன், இனி என் நாக்கு கவின் மற்றும் லாஸ்லியாவின் பெயரை உச்சரிக்காது என்றார்.

பின்தொடர வேண்டாம்
மேலும் தான் யார் குறித்தும் பேசவில்லை, கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் தனது பேச்சுக்கு வரவேண்டாம் என்றும் நாகரிகமாக பேச தெரியாதவர்கள் தன்னை பின் தொடர வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











