CM விஜய்யை விமர்சிக்காதீங்க.. தெளிவாக எடுத்துச் சொல்லும் இயக்குநர் சேரன்..
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும், பெண்கள் பாதுகாப்பு படை, போதைப்பொருள் ஒழிப்பு படை என மூன்று கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார். இப்படி இருக்கும்போது, மாதம் 200 யூனிட் மின்சாரம் என்று தெரிவித்துவிட்டு, தற்போது இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் என்று கூறுவது பித்தலாட்டம் என்று பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனங்களுக்கு, CM விஜய்யை விமர்சிக்காதீங்க என இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில், " மரியாதைக்குரிய மக்களே... அனைத்து மக்களையும் சேர்த்துதான்.. கட்சி பேதமின்றி சொல்கிறேன்.. நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறு பகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்தும் பார்த்தாகிவிட்டது.. மக்களும் முழுக்கவே அனைவரும் புதியவர்கள் வேண்டும் என தெரிந்து தான் இந்த வாக்கை அளித்திருக்கிறார்கள்.

முதல் நாளிலேயே: பதவிப்பிரமாணம் முடிந்தவுடனேயே விமர்சனங்களை முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பதே நன்று.. அதற்குள் தமிழ்த்தாய் பின்னால் போய்விட்டாள், 200 யூனிட் கரண்ட் என்னாச்சு என முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம்.. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போடச் சொல்லி இருப்பாரா... 200 யூனிட் ஃபிரி என்பதில் என்ன குளறுபடி இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமா... அவர்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.. விஜய் முழுக்க முழுக்க புதியவர்.
ஜால்ரா இல்லை: அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய நாட்கள் எடுக்கும்.. பொறுத்திருங்கள்.. அவர் புரிந்து நன்றாக செயல்பட்டு விட்டால் நல்லதுதானே.. அப்படி இல்லையென்றால் மக்களே புரிந்து மாற்றிவிடுவார்கள் தானே. இதை நான் யாருக்கு ஆதரவாகவும் வாசிக்கவில்லை... இல்லை உடனே விஜய்க்கு ஜால்ரா போடுறேன்னு சொல்லக்கூடாது... விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஒரு அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம் என்பதற்காகத்தான் இந்த பதிவு..

வரவேற்பு: முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல சமுதாய கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்பணிப்பை தாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தவெகவினர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications