இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. இது எனக்கு புடிச்சிருக்கு சார்'.ரஜினியின் முடிவு.. சேரன் வரவேற்பு!

By

சென்னை: 'இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. இது எனக்கு புடிச்சிருக்கு சார்' என்று நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றுள்ளார் இயக்குனர் சேரன்

Recommended Video

Januaryல் கட்சி! Rajinikanth திடீர் அறிவிப்பு | Filmibeat Tamil

நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்தபோது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.

அவர், எப்போது அரசியல் கட்சி தொடங்குவார், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பரபரப்பு அறிக்கை

பரபரப்பு அறிக்கை

இந்நிலையில், அக்டோபர் மாதம் ரஜினி பெயரில் பரபரப்பு அறிக்கை வெளியானது. அதில், அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சி பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். கொரோனா காரணமாக, யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தேன்.

அரசியலில் ஈடுபடலாமா

அரசியலில் ஈடுபடலாமா

அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர். எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.

கட்சி தொடங்க

கட்சி தொடங்க

இதுபற்றி ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் என் உடல்நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் உண்மைதான். என்று தெரிவித்தார். இந்நிலையில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சில நாட்களுக்கு முன் சந்தித்தார் ரஜினி அப்போது அவரிடம் கட்சி தொடங்க அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஜனவரியில் கட்சி

ஜனவரியில் கட்சி

இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டரில் ரஜினி அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் 31 இல் வெளியிடுவேன் என கூறியுள்ளார். இதை திரைத்துறையினர் பலர் வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களிலும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்களை பொறுத்தே

ஆட்களை பொறுத்தே

இயக்குனர் சேரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரவேற்கிறோம் சார்.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. இது எனக்கு புடிச்சிருக்கு சார்.. மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம்.. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் ஆட்களை பொறுத்தே அந்த நம்பிக்கை உருவாகும் சார்.. உங்களை வாழ வைத்தவர்களுக்கான இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X