உங்க இடம் அப்படியே இருக்கு பங்காளி.. சீக்கிரம் வாங்க.. வடிவேலுவுக்கு பிரபல இயக்குநர் அழைப்பு!
சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குநர் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகரான வடிவேலு இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

பாடி லாங்குவேஜ்
மீம் கிரியேட்டர்களுக்கு பேருதவியாக இருந்து வரும் வடிவேலுவுக்கு என பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவருடைய டைமிங் டயலாக்குக்கும் பாடி லாங்குவேஜூக்கும் ஏகோபித்த ஃபேன்ஸ்.

பிறந்த நாள்
எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை நிரப்ப முடியாது என கூறி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் வடிவேலுக்கு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நாகேஷ்க்கு பிறகு
அந்த வகையில் பிரபல இயக்குனரான சேரனும் நடிகர் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வடிவேலுவை வித்தியாசமாக பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும் நடிகர் நாகேஷுக்கு பிறகு தனக்கு பிடித்த நடிகர் வடிவேலுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாங்க பங்காளி
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், வடிவேலு .. திரு நாகேஷ் அவர்களுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காமெடி நடிகர்.. இன்று உலகம் முழுதும் மீம்ஸ் மூலமும் கொடிகட்டி பறக்கும் வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் இடம் அப்படியே இருக்கிறது பங்காளி.. வாங்க மீண்டும் நடிக்க.. என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ரெட் கார்டு
‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படப் பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாய் எந்தப் படத்திலும் நடிக்காமல் உள்ளார் வடிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











