கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. இயக்குநர் சேரன் ஆவேசம்!

சென்னை: ராஜாவுக்கு செக் படம் குறித்து டிவிட்டிய ரசிகைக்கு இயக்குநர் சேரன் ஆவேசமாக புலம்பி தீர்த்திருக்கிறார்.

இயக்குநர் சேரன் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சேரன்.

அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார் சேரன்.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன். இதில் மிகவும் பொறுப்புணர்வோடும் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருந்ததால் மக்களின் அன்புக்குரியவர் ஆனார். ஆனால் கவின் - லாஸ்லியா காதலுக்கு அவர் தெரிவிப்பதாக கூறிய கவினும் அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்த்தனர்.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

இந்நிலையில் இயக்குநர் சேரனின் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸானது. இந்தப் படத்தை இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்க வில்லை.

த்ரில்லிங் என்டெர்டெயினர்

இந்நிலையில் இப்படம் அமேஸான் பிரைமில் இடம் பெற்றிருக்கிறது. ராஜாவுக்கு செக் படத்தை அமேஸானில் பார்த்த ரசிகை ஒருவர், படத்தை பார்த்து த்ரில்லிங் என்டெர்டெயினர் படம் என தெரிவித்துள்ளார். அதற்கு மிகவும் ஆவேசமாக பதில் கூறியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

வயிறு எரியுதும்மா..

அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை... எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.... அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க... வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு... என பதிவிட்டுள்ளார் சேரன்.

நெட்டிசன்கள் ஆதரவு

சேரனின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உண்மைதான் சார்.. நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.. இன்னும் பத்து வருடங்கள் கழித்து "ராஜாவுக்கு செக்" படம்போல வருமான்னு பேசுவாங்க.. என சேரனுக்காக கவலைப்பட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X