சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்.. எல்லாம் மாயமே.. வான் மேகத்தை பார்த்து கவிதை வடித்த சேரன்!
சென்னை: இயக்குநர் சேரன் வான் மேகங்களை மொட்டை மாடியில் இருந்தப்படி ரசித்து கவிதை வடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சேரன்.
இயக்குநர் கேஎஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக கேரியரை தொடங்கினார்.

பல வெற்றி படங்கள்
பின்னர் 1997ஆம் ஆண்டு பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக திருமணம்
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வலம் வருகிறார் சேரன். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

ரசிகர்களை கவர்ந்த சேரன்
இதில் அவர் விளையாடிய கண்ணியமான விளையாட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சேரன் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

எல்லாம் மாயமே..
அந்த வகையில் தற்போது வான் மேகங்களை பார்த்து கவிதை வடித்துள்ளார் சேரன். அவர் பதிவிட்டிருப்பதாவது, சித்திரைச்செவ்வானம்
சிரிக்க கண்டேன்..
நித்தம் உன் காதல் கண்டு
சிலிர்த்துக்கொண்டேன்..
நிலமாகிய என்னைசுற்றி
நீ போடும் கோலங்கள்
அழகானது ஆகாயமே...
ஆனால் எல்லாம் மாயமே.. என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களும் கவிதை
மேலும் அழகிய மேகக் கூட்டங்களை மொட்டை மாடியில் இருந்தப்படி ரசித்து புகைப்படமும் எடுத்துள்ளார் சேரன். சேரனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், தங்களின் மேகக் கவிதைகளை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











