»   »  இயக்குநர் செய்யாறு ரவி மரணம்... அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்!

இயக்குநர் செய்யாறு ரவி மரணம்... அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் தர்ம சீலன், அரிச்சந்திரா, தர்மயுத்தா (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார்.

தர்மயுத்தா படம், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். விரைவில் வெளியாக உள்ளது.

Director Cheyyar Ravi passes away

சத்யஜோதி பிலிம்ஸுக்காக அன்னக்கொடியும் 5 பெண்களும் என்ற சீரியலை இயக்கி வந்தார். இன்று இந்த சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, செய்யாறு ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது பிற்பகல் 12 மணிக்கு அவர் காலமானார்.

அவரது விலாசம்: பிளாட் எண்: A - 5, டிரினிட்டி காம்ப்ளக்ஸ், எண் : 110, 4 வது அவென்யூ, அசோக்நகர், சென்னை - 83.

Read more about: ravi death ரவி மரணம்
English summary
Director Cheyyar Ravi was passed away today at a serial shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil