Boat: வடிவேலுவுடன் சண்டையா.. இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் குறித்து பேசிய இயக்குநர் சிம்புதேவன்!
சென்னை: இயக்குனர் சிம்பு தேவன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த முதல் படத்திலேயே அவர் மிக சிறந்த இயக்குனராக தன்னை வெளிப்படுத்தினார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் மிகப்பெரிய படமாக பிரம்மாண்டமாக அமைந்திருந்தது இந்தப்படம்.
கடந்த 20 ஆண்டுகளாக சிம்புதேவன் திரையுலகில் பயணித்து வந்த போதிலும் எட்டு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 8வது படமாக உருவாகியுள்ள போட் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். சிம்புதேவனின் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இயக்குநர் சிம்புதேவன்: வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக கோலிவுட்டில் கவனம் பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். அவர் தற்போது பீரியட் படமாக எடுத்து முடித்துள்ள போட் படத்தில் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். அவருடன் இணைந்து கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் பிரஸ் மீட் தற்போது சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
போட் படம்: சிம்புதேவன், கௌரி கிஷன், மதுமிதா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் போட் படம் குறித்து பல்வேறு தகவல்களை சிம்பு தேவன் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் யோகி பாபு பங்கேற்காதது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து அவர் நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருப்பதாக இயக்குனர் சிம்புதேவன் கூறினார். இதனிடையே இந்த படம் லைஃப் ஆஃப் பை படத்தின் தழுவலா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்புதேவன் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
வடிவேலுவுடன் சண்டையா?: கடந்த 1940களில் சென்னையின் மீது ஜப்பான் குண்டு போடுவதாக கூறப்பட்ட சூழலில் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் படகில் ஏறி கடலில் பயணிக்கும் 10 பேரை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளதாகவும் லைஃப் ஆஃப் பை படத்தில் மொத்தமே 3 பேர் மட்டுமே கதையில் இருப்பார்கள் என்றும் போட் படத்திற்கான வித்தியாசத்தை பகிர்ந்துக் கொண்டார். இதனிடையே சிம்புதேவனிடம் வடிவேலுவுடன் சண்டை காரணமாகத்தான் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் உருவாகாமல் போனதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்புதேவன், அப்படியெல்லாம் இல்லை என்றும் அந்த படத்தை எடுப்பதற்கான சரியான காலகட்டம் இன்னும் அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகள்.. 8 படங்கள்: இந்தப் படம் உருவாகவேண்டும் என்று தானும் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் வடிவேலு கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கி கோலிவுட்டில் அறிமுகமானவர் சிம்புதேவன். தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்த நிலையில் ஏராளமான பொருட்செலவில் இந்தப்படம் உருவாகியிருந்தது. சிம்புதேவன் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த போதிலும் இதுவரை எட்டு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளதாகவும் ஒரு படத்தில் நுழைந்துவிட்டால் அந்த படம் குறித்து மட்டுமே தான் யோசிப்பேன் என்றும் சிம்பு தேவன் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











