இயக்குனர் சிம்புதேவனுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்துகள்!

சென்னை : யாரும் யோசிக்க முடியாத வித்தியாசமான திரைப்படங்களில் காமெடி கலந்து மக்களை ரசிக்க வைப்பதில் வல்லவர் இயக்குனர் சிம்புதேவன்.

மற்ற இயக்குனர்களிடமிருந்து சிந்தனையிலும், இயக்கத்திலும் முற்றிலும் வித்தியாசமான இயக்குனர் சிம்புதேவன் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி பிரபலங்கள் பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு திரைப்படங்களிலும் மற்ற இயக்குனர்களிடமிருந்து சிந்தனையிலும், இயக்கத்திலும் முற்றிலும் வித்தியாசமான இயக்குனர் சிம்புதேவன் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதையொட்டி பிரபலங்கள் பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹாலிவுட்டில் சாத்தியம்

ஹாலிவுட்டில் சாத்தியம்

குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் விரும்பும் பேன்டஸி கதைகள் மற்றும் திரைப்படங்கள் போன்றவை ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியமாகி வந்த நிலையில் இந்தியாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இது போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றியும் பெற்று வருகின்றனர்.

தனித்துவமான இயக்குனர்

தனித்துவமான இயக்குனர்

இந்த வகையில் தமிழில் பல இயக்குனர்களும் வழக்கமான மசாலா திரைப்படங்களையும், எதார்த்தமான கதைகளையும் கொண்டு இயக்கி வந்த நிலையில் சிந்தனையிலும் இயக்கத்திலும் மற்றவர்களை விட வித்தியாசமாக யோசித்து பேன்டஸி திரைப்படங்களை இயக்கி வந்த சிம்பு தேவன் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

இயக்குனர் சேரனிடம் வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிம்புதேவன், வைகைப்புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான நிலையில், இயக்கிய முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது, மேலும் சிறந்த காமெடி திரைப்படமாக இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கதைகளம்

கதைகளம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியதற்கு பிறகு அறை என் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி என வித்தியாசமான திரைப்படங்களை ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத பேன்ட்ஸி கதைகளைக் கொண்டு உயர்ந்த சிம்புதேவன் இன்றளவும் தனித்துவமான இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது மிகவும் பிரபலமாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றில் இளம் நடிகர்களை வைத்து "கசடதபற" படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு தனது ஒவ்வொரு திரைப் படங்களின் மூலமும் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகில் அனைவரையும் பிரமிக்க வைத்து வெற்றிக்கு மேல் வெற்றி கொடுத்த இயக்குனர் சிம்புதேவன் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X