Chimbu deven: விஜய்யோட புலி படம் பெயிலியருக்கு இதுதான் காரணம்.. சிம்புதேவன் ஓபன்!
சென்னை: நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்பு தேவன். சங்கர் தயாரிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதே ஜானலில் நடிகர் விஜய்யின் புலி படத்தையும் இயக்கியிருந்தார் சிம்பு தேவன்.
ஆனால் புலி படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இந்நிலையில் தற்போது யோகி பாபு, கௌரி கிஷன் கூட்டணியில் போட் படத்தை இயக்கி முடித்துள்ளார் சிம்பு தேவன். இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் சிம்பு தேவன் தற்போது விஜய்யின் புலி படத்தின் தோல்வி குறித்தும் பேசியுள்ளார்.

இயக்குநர் சிம்புதேவன்: பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் படத்தில் யோகிபாபு, கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் செகண்ட் யூனிட் இயக்குனராக சில போர்ஷன்களை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். நடிகர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு தேவன்.
ஷங்கர் தயாரிப்பில் படம்: ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிம்புதேவன் ஷங்கர் தயாரிப்பிலேயே தன்னுடைய முதல் படத்தை இயக்கினார். முன்னதாக சேரனிடமும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் போட் படத்தின் பிரமோஷன்களுக்காக பேட்டியொன்றில் பேசிய சிம்புதேவன், தன்னிடம் ஒரு கதை இருப்பதாக கூறி ஷங்கர் அலுவலகத்தில் சொல்லிவிட்டு வந்ததாகவும் அவர்களும் நான்கு நாட்களிலேயே தன்னை அணுகியதாகவும் கூறியுள்ளார். தான் முதலில் காதல் படம் ஒன்றை இயக்குவதற்காகவே ஷங்கரிடம் கதையை கூறியதாகவும் அவரும் ஓகே சொல்லி இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் வேளையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் கதையை தான் கூறியதாகவும் இதையடுத்து இந்த கதை நன்றாக இருக்கிறதே என்று தெரிவித்த ஷங்கர் அந்த படத்தையே முதலில் எடுக்க தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் புலி படம்: சிம்புதேவனுக்கு இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மிகப்பெரிய அளவில் அறிமுகத்தை கொடுத்தது. தற்போதும் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் காணப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள் படத்தையும் ஷங்கர் தயாரிப்பிலேயே சிம்பு தேவன் இயக்கினார். இதையடுத்து இம்சை அரசன் போன்ற கதைகளத்தில் படம் இயக்க விஜய் தன்னிடம் அணுகியபோது புலி படத்தை விஜய்யை வைத்து இயக்கியிருந்தார் சிம்பு தேவன். இந்த படத்தில் விஜய்யுடன் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் ஹன்சிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்திருந்தனர்.
புலி படத்தின் தோல்வி: புலி படம் விஜய்யின் கேரியரில் வித்தியாசமான படமாக அமைந்திருந்தது. ஆயினும் இந்த படம் ரசிகர்களை ஈர்க்க தவறியது. மிகப்பெரிய சொதப்பலான முடிவையே இந்த படம் விஜய்க்கு கொடுத்தது. இந்நிலையில் நீண்ட ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் தோல்விக்கு காரணத்தை சிம்பு தேவன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். புலி படத்தில் தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் ரெய்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் படம் வெளியானதும் கடும் விமர்சனங்களை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
தவறிய எதிர்பார்ப்பு: குழந்தைகளுக்கான படமாகவும் இம்சை அரசன் படம் போலவே அனைவருக்குமான படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவர தவறிவிட்டதாகவும் சிம்பு தேவன் எனது பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் படம் அதன் பின்பு டிவியில் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் பலரும் கால் செய்து பாராட்டு தெரிவிப்பதாக சிம்பு தேவன் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தை வெற்றி படமாகவே கொடுக்க முடியாது என்றும் ஆடியன்ஸ் பார்க்கும் வரை அந்த படத்தின் ரிசல்ட்டை தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











