என்ன மாதிரியான மனிதர்.. என்ன மாதிரியான பாராட்டு.. ரஜினி குறித்து சிபி சக்ரவர்த்தி வேற லெவல் ட்வீட்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், மாளவிகா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது டான் படம்.
இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் சிவகார்த்திகேயன், சிபி சக்ரவர்த்தி ஆகியோர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

டான் படம்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, சிவாங்கி, பால சரவணன், விஜே விஜய், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி இந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது டான் படம். முன்னதாக அவரது டாக்டர் படம் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த நிலையில் தற்போது இந்தப் படமும் இணைந்துள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கம்
படத்தை இயக்கியிருந்தார் புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. முதல் படமாக இருந்தாலும் ஆசிரியர் -மாணவர் உறவு, அப்பா -மகன் உறவு, நண்பர்கள், கல்லூரி வாழ்க்கை என அனைத்தையும் அளவாக மிக்ஸ் செய்து கொடுத்திருந்தார். படத்தை இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான கதைக்கரு
இந்தப் படத்தில் இடம்பெறும் தன்னுடைய மகன்கள் ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்பாக்கள் வில்லன்களாகவே இருந்து செத்து விடுகின்றனர் என்ற வசனம் அனைவருக்கும் திரையரங்குகளில் கண்ணீரை வரவழைத்தது. தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தில் ஒரு இளைஞனுக்கு சரியான நேரத்தில் அது தென்படும் என்பதையும் கதைக்கருவாக கொண்டிருந்தார் சிபி சக்ரவர்த்தி.

ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த டான்
இந்தப் படம் தற்போது 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இன்னும் சில தினங்களில் கோடி ரூபாய் வசூலை படம் எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், அடுத்தடுத்து டாக்டர், டான் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

ரஜினிகாந்த் -சிவகார்த்திகேயன் சந்திப்பு
இந்நிலையில் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது பாராட்டை தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்து தான் கண்கலங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

இந்திய சினிமாவின் டான்
இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், இந்திய சினிமாவின் டானுடன் என்று சில எமோஜிகளையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரஜினி அவருடைய நேரத்தை ஒதுக்கி டான் படத்திற்கு மதிப்புமிக்க பாராட்டுக்களை தெரிவித்ததற்கு நன்றி தலைவா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகத்தான நாள்
இந்த சந்திப்பின்போது இயக்குநர் சிபி சக்ரவர்த்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் இது ஒரு மகத்தான நாள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். சினிமா, வாழ்க்கை மற்றும் டான் படம் குறித்து ரஜினிகாந்த் தங்களிடம் ஒரு மணிநேரம் பேசியதாகவும் கூறினார்.
Recommended Video

என்ன மாதிரியான மனிதர்
இந்த சந்திப்பின்போது டான் படம் குறித்து என்ன மாதிரியான படம், என்ன மாதிரியான எமோஷன் என்று அவர் கூறியபோது தாங்கள் வானத்தில் பறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களால் கூற முடிந்ததெல்லாம் என்ன மாதிரியான மனிதன் என்பதே என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து லவ் யூ தலைவா என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினியிடம் வாழ்த்து பெறும் பிரபலங்கள்
பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்கள் அல்லது இயக்குநர்கள், நடிகர்கள் என சமீப காலங்களில் ரஜினியிடம் முன்னதாக வாழ்த்துக்களை பெறுவது என்பது வாடிக்கையாகியுள்ளது. மூத்த கலைஞனை மதிப்பது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும் சிறிய பட்ஜெட் இயக்குநர்களுக்கும் இது சாத்தியப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











