டான் கிளைமேக்ஸை தியேட்டரில் நிஜமாக்கிய இயக்குநர்.. கண் கலங்கி அழும் வீடியோ டிரெண்டாகி வருது!
சென்னை: டான் படத்தில் வருவதை போலவே அந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து கண் கலங்கி அழுதுள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.
Recommended Video
இயக்குநர் அட்லியின் தெறி மற்றும் மெர்சல் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சிபி சக்கரவர்த்தி.
சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி என தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களை இயக்கி அசத்தி உள்ளார்.

வசூல் டான்
சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் தியேட்டரில் சக்கைப் போடு போட்டு வருகிறது. சமீப காலமாக கோலிவுட்டில் வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக அடிவாங்கிய நிலையில், டான் படம் அதிலும் பாஸ் ஆகிவிட்ட நிலையில், இரண்டு நாட்களில் 20 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது.

80 மார்க்
டான் படத்தில் சிவகார்த்திகேயன் வாங்குவதை போலவே படமும் 80 மார்க் எடுத்து பாஸ் ஆகி விட்டது என விமர்சகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். சில லாஜிக் மீறல்கள் மற்றும் தேவையற்ற திணிப்பு காட்சிகள் இடம்பெற்றாலும், மொத்தமாக ரசிகர்களின் நெஞ்சை நக்கி பாசத்தால் அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார் இயகுநர் சிபி சக்கரவர்த்தி.

கண் கலங்கிய சிபி சக்கரவர்த்தி
டான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் தியேட்டரில் தான் இயக்கிய படத்தை பார்த்து அழுவதை போலவே இயக்குநர் சிபி சக்கரவர்த்தியும் முதல் நாள் காட்சியை பார்த்து கண் கலங்கி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. டான் படத்தின் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனே இந்த வீடியோவையும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் உருக்கம்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நிஜமாகவே இத்தனை நாட்கள் கனவு மற்றும் உழைப்பு கண் முன்னே பெரிய திரையில் தெரியும்போது என்னையும் மீறி கலங்கி விட்டேன். அந்த நினைவுகளை படம் பிடித்ததற்கு ரொம்பவே நன்றி பாஸ்கரன் என ஒளிப்பதிவாளருக்கு நன்றி கூறியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.

கிளைமேக்ஸ் வேறலெவல்
கடைசி 20 முதல் 30 நிமிடம் படம் வேறலெவல் என ரசிகர்கள் இயக்குநரின் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு பாராட்டி வருகின்றனர். நீங்கள் எறிந்த முதல் கல்லே நல்ல தூரம் தான் சென்றுள்ளது. அடுத்து எறியும் கற்கள் இன்னும் பெரிய இலக்கை அடையும் என டான் படத்தின் காட்சிகளை குறிப்பிட்டே ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











