Cibi chakravarthi: நானியை இயக்கும் டான் பட இயக்குநர்.. விரைவில் அறிவிப்பு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

கல்லூரி கால வாழ்க்கையையும் அது கொடுக்கும் படிப்பினையையும் மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

Director Cibi chakravarthi going to direct Actor Nani in his next

நானியை இயக்கும் டான் பட இயக்குநர்: நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான டான் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. இந்தப் படம் கல்லூரி கால வாழ்க்கை மற்றும் அந்த காலகட்டத்தில் ஏற்படும் வாழ்க்கை குறித்த புரிதலை மையமாக கொண்டு வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் கல்லூரி மாணவனாகவும் தொடர்ந்து இயக்குநராகவும் நடித்திருந்தார். படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. படத்தின் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுக்கும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமில்லாமல் இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து அவர் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தங்களது அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் நானியை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஏறக்குறைய உறுதிப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் தற்போது சிபி சக்ரவர்த்தி பிசியாகியுள்ளார். ஆனால் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் தான் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Cibi chakravarthi going to direct Actor Nani in his next

முன்னதாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெலுங்கில் பிரபலமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டான் படத்தில் முதலில் நடிக்க நானியை தான் சிபி சக்ரவர்த்தி அணுகினாராம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நடிக்க முடியாத நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி, பல வருடங்களாக டான் படத்தின் கதையை தன்னுடைய மனதில் வைத்திருந்ததாக முன்னதாக தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். வாழ்க்கை குறித்த இதயப்பூர்வமான படத்தை இயக்க விரும்பியதாகவும் அதை டான் படத்தில் சிறப்பாக கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தப் படத்தில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையிலான பிணைப்பு கூறப்பட்டிருந்தது. படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X