இன்ஜினீயர் மாணவர்கள் என்றால் யார் தெரியுமா... சிபி சக்ரவர்த்தி வெளியிட்ட புதிய வீடியோ!

சென்னை : சிவகார்த்திகேயனின் டான் படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே தொடர்ந்து பெற்று வருகிறது.

ரசிகர்கள் தொடர்ந்து இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். வார நாட்களிலும் படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அப்பா சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு என அனைத்தையும் சிறப்பான கலவையாக அவர் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் டான் படம்

சிவகார்த்திகேயனின் டான் படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் டான் படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். படத்தில் அவருக்கு கெட்டப்புகள் சிறப்பாக பொருந்தியுள்ளன.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனை எப்படி பார்க்க ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற விஷயத்தை சரியாக கணித்து அவர் இந்தப் படத்தை எடுத்துள்ளார். படத்தில் அப்பா -மகன் சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவை சரிவிகிதமாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கண்கலங்கிய ரசிகர்கள்

கண்கலங்கிய ரசிகர்கள்

அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவரது சிறப்பான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. அவர் தனது அப்பாவை நினைவுப்படுத்தியதாக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். சிலர் கண்கலங்கிய சம்பவங்களும் நடைபெற்றது.

வழக்கமான அலப்பறைகள்

வழக்கமான அலப்பறைகள்

இந்தப் படத்தில் தன்னுடைய வழக்கமான அலப்பறைகளுடன் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். டாக்டர் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் அந்த கேரக்டருக்கே உரிய மெச்சூரிட்டியை வெளிப்படுத்திய அவர், இந்தப் படத்தில் கல்லூரி மாணவனுக்கு தேவையான உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிபி சக்ரவர்த்தி வீடியோ

படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் ஒரு வசனத்தை இயக்குர் சிபி சக்ரவர்த்தி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஜினீயர் மாணவர்கள் அனைவரும் தியாகிகள் என்ற இந்த வசனம் படத்தில் சிறப்பாக பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X