அட்லியை கலாய்த்த இயக்குநர்… இருந்தாலும் இப்படி சொல்லியிருக்கக்கூடாது !
சென்னை : கோலிவுட்டில் மாஸ் இயக்குநர் என பெயர் எடுத்த அட்லியை பிரபல இயக்குநர் பங்கமாக கலாய்த்து உள்ளார்.
ஆர்யா,நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இந்த 4 படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.
பாலிவுட்டில் வெற்றி கொடியை நாட்ட தயாரான அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அட்லியின் பாலிவுட் கனவு
2020ம் ஆண்டு ஷாருக்கான் அட்லியின் படத்திற்கு ஒகே சொல்லவே குஷியாகிப்போன அட்லி அந்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்த படத்தில் தனது ராசியான நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார். இப்படத்திற்கு லயன் என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய போதே கொரோனாவால் படப்பிடிப்பு தாமதமானது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் வசித்து வருகிறார் அட்லி. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அட்லியை கிண்டலடித்த இயக்குநர்
இந்நிலையில், பிரபல இயக்குனர் சி.எஸ்.அமுதனின் ட்விட்டரில் பக்கத்தல் ரசிகர் ஒருவர் 'தமிழில் proper ஆக ரீமேக் செய்யப்பட்ட படம் எது' என கேட்டிருக்கிறார். ரசிகரின் அந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் மெர்சல் என கூறி, அட்லியை பங்காக கலாய்த்துள்ளார். இயக்குநரின் இந்த பதிலைப்பார்த்த ரசிகர்கள் என்னது, மெர்சல் ரீமேக் செய்யப்பட்ட படமா என்றும், இருந்தாலும் அட்லியை இப்படி கிண்டலடித்து இருக்கக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
Recommended Video

சி.எஸ்.அமுதன்
இயக்குநர் சி.எஸ்.அமுதன்,மி ர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் , தமிழ் படம் 2.0 திரைப்படத்தை இயக்கி உள்ளார். நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சமில்லாத இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் சி.எஸ்.அமுதன் தற்போது, விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் "ரத்தம்"படத்தை இயக்கி வருகிறார். கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிவரும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











