உண்மையான ஃப்ளாஷ்பேக்குகள் இதுதான்.. லியோவை வம்புக்கு இழுத்த இயக்குநர்!
சென்னை: உண்மையான ஃப்ளாஷ்பேக் இதுதான் என்று லியோ படத்தை வம்புக்கு இழுக்கும் வகையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

நெகட்டிவ் விமர்சனம்: லியோ படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், ஐந்தாவது படத்திலேயே லோகேஷ் கனகராஜூக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் வன்மத்தை கொட்டித்தீர்த்தனர்.
லியோ பிளாஷ் பேக்: மேலும், லியோ படத்தின் பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறி வருகிறார். ஆனால் அதையும் ரசிகர்கள் இப்போது கலாய்க்க வரும் நிலையில், நேற்று, மன்சூர் அலிகான் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கை சொல்லும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வம்புக்கு இழுத்த இயக்குநர்: இந்நிலையில், லியோ படத்தின் பிளாஷ் பேக்கை வம்புக்கு இழுக்கும் வகையில் இயக்குநர் சிஎஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரத்தம் படத்தில் உண்மையான ஃப்ளாஷ்பேக் இருப்பதாகவும் அது அமேசானில் வெளியாவதாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரத்தம் ஓடிடி: விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் நவம்பர் 3ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 6ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.


Click it and Unblock the Notifications











