உடல்நலன் தேறிய பாரதிராஜா.. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்!
சென்னை : பிரபல இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது குடும்பத்தினர் அவரை உடனிருந்து கவனித்துக் கொண்ட நிலையில், வைரமுத்து, ராதிகா உள்ளிட்டவர்களும் நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா
பிரபல இயக்குநர் பாரதிராஜா ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக உணர்ந்து, தன்னுடைய இயல்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மண்மணம் மாறாத இவரது படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் லிஸ்ட்டில் எப்போதுமே காணப்படுகின்றன.

கிராமத்து கதைக்களங்கள்
தன்னால் கிராமத்துக் கதைகளையும் இயல்பு மாறாமல் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த பாரதிராஜா சிவப்பு ரோஜாக்கள் போன்ற த்ரில்லர் கதைகளை நகரத்து கதைக்களத்துடன் கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டவர். கமல் நடிப்பில் சிவப்பு ரோஜாக்கள் அந்தக் காலத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

நடிப்பில் கவனம்
அதிகமான படங்களை இயக்கிவந்த பாரதிராஜா, வயது மூப்பு காரணமாகவோ என்னவோ சமீப காலங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய படங்களில் இவரும் சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், இவரை நடிகராக திரையுலகம் ஏற்றுக் கொண்டது.

சிறப்பான நடிப்பு
பலருக்கு நடிப்பை சொல்லித்தந்த பாரதிராஜாவின் நடிப்பு ரசிகர்களை கவராமல் இருக்குமா. எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் தற்போதும் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரதிராஜாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கும் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். பாரதிராஜாவை வைரமுத்து, ராதிகா, இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

நாளை டிஸ்சார்ஜ்?
இந்நிலையில் தற்போது பாரதிராஜாவின் உடல்நலன் தேறியுள்ளதாகவும் நாளைய தினம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் உடல்நலன் தேறி வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற ரசிகர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











