Pradeep Ranganathan: இயக்கமா வேண்டவே வேண்டாம்.. அறிமுகம் செய்த தயாரிப்பாளருக்கு நோ சொன்ன பிரதீப்!
சென்னை: கோமாளி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. கோமாவில் சில ஆண்டுகள் இருக்கும் ஹீரோ, கண்விழித்ததும் நடப்பு சமுதாயத்தினருடன் ஒன்றிணைய முடியாமல் அவர் தவிப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பிரதீப் ரங்கநாதனுக்கு மட்டுமில்லாமல் ஜெயம் ரவிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து தானே ஹீரோவாக களமிறங்கினார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். இவானா இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக நடித்திருந்தார். காதல், பொசசிவ்னஸ் இவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 5 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. தன்னுடைய இயல்பான நடிப்பால் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கினார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார்.

கோமாளி படம்: ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான படம் கோமாளி, யோகிபாபுவும் இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒட்டுமொத்த திரையுலகினரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து தானே ஹீரோவாக லவ் டுடே படம் மூலம் களமிறங்கினார். நடிகை இவானா ஜோடியாக இணைந்திருந்த இந்தப்படம் முதல் படத்தை காட்டிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்: இதையடுத்து பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூவும் கோலிவுட்டில் எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. அடுத்த படம் அவரது இயக்கத்தில் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் பல்வேறு யூகங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், கொஞ்ச நாளைக்கு இயக்கமே வேண்டாம்பா என்னும்படியாக அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து தற்போது LIC படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் நடந்து வருகிறது.
விக்னேஷ் சிவனுடன் பிரதீப் கூட்டணி: ஒரு புறம் படத்தின் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மற்றொரு படத்தை தயாரிக்க கோமாளி படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவரது இந்த முயற்சிக்கு பிடி கொடுக்காமல் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து போக்கு காட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கோமாளி படம் மூலம் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்த வேல்ஸ் நிறுவனத்தையே அவர் புறக்கணிப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
LIC படம்: தற்போது விக்னேஷ் சிவன் -பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகிவரும் LIC படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். படத்தின் 60 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சிய காட்சிகளையும் சரியான திட்டமிடலுடன் விக்னேஷ் சிவன் நடத்தி வருகிறார். அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நடக்கவுள்ளது. முன்னதாக ஈஷா மையத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











