காதல் திருமணம் செய்யப் போகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்.. பொண்ணு யார் தெரியுமா?

சென்னை: கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு ரசிகர்கள் உள்ளத்தை எல்லாம் கொள்ளையடித்த இயக்குநர் தேசிங் பெரியசாமி விரைவில் காதல் திருமணம் செய்ய உள்ளார்.

Recommended Video

Director Desingh Periyaswamy Hitched up with Niranjani | Kannum Kannum Kollaiyadithal

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகையையே அவர் திருமணம் செய்து கொள்ளப் போவது தான் செம சர்ப்ரைஸிங்கான தகவல்.

இயக்குநர் தேசிங் பெரியசாமியின் திருமண அழைப்பிதழை இயக்குநர் திரு வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் கெளதம் மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே போன் செய்து வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இந்நிலையில், தற்போது இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்கிற அறிவிப்பு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் திரு வெளியிட்ட திருமண அழைப்பிதழ் மேலும் பல தகவல்களை ரிவீல் செய்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நடிகையையே இயக்குநர் தேசிங் பெரியசாமி காதல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

பொண்ணு யாரு

பொண்ணு யாரு

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரிது வர்மாவின் தோழியாகவும் இன்னொரு நாயகியாகவும் நடித்த நடிகை நிரஞ்சனி அகத்தியனை தான் இயக்குநர் தேசிங் பெரியசாமி திருமணம் செய்து கொள்ளப் போகிறார். தல அஜித்தின் காதல் கோட்டை படத்தை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் தான் நிரஞ்சனி.

இயக்குநர்களே மாப்பிள்ளைகள்

இயக்குநர்களே மாப்பிள்ளைகள்

இயக்குநர் அகத்தியனின் மூன்று மகள்களும் இயக்குநர்களையே திருமணம் செய்து கொள்ளும் ஆச்சர்யமான ஒற்றுமையும் இதில் அடங்கி உள்ளது. மூத்த மகளான கனியை சமர், தீராத விளையாட்டு பிள்ளை படங்களை இயக்கிய இயக்குநர் திரு திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மகளான நடிகை விஜயலக்‌ஷ்மியை பண்டிகை படத்தை இயக்கிய ஃபெரோஸ் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மகளான நிரஞ்சனியை தேசிங் பெரியசாமி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

இயக்குநர் திரு வெளியிட்டுள்ள அந்த திருமண அழைப்பிதழ் புகைப்படத்தில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் இருவரது பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கூடிய சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், முக்கியமான பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது. சீக்கிரமே திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X