அடுத்தப்படம் ரஜினிகாந்துடனா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்!
சென்னை: தனது அடுத்தப்படத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கப்போவதாக வெளியான தகவல் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் கடந்த ஆண்டு துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
இந்தப் படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குநரான தேசிங்கு பெரியசாமி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினி வாழ்த்து
பாக்ஸ் ஆபிசிலும் வசூலை குவித்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். பல அதிரடித் திருப்பங்களை கொண்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

கதைக் கேட்ட ரஜினி
மேலும் தனக்கும் ஒரு கதை தயார் செய்யும் படி கேட்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாக தகவல் வெளியானது.

அண்ணாத்த முடிந்ததும்
அந்தக் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தேசிங்கு பெரியசாமியின் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பார் என்று செய்திகள் பரவின.

தேசிங்கு பெரியசாமி விளக்கம்
இந்நிலையில் இந்த தகவல் குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. விரைவில் அப்டேட் செய்கிறேன்.. அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.. ஸ்டே சேஃப் டேக் கேர்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











