ரஜனிகாந்த் அடுத்த பட இயக்குநர் நானா?.. என்ன சொல்கிறார் தேசிங்கு பெரியசாமி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் தனது தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் தலைவர் 170 படம் குறித்தும் இணையதளத்தில் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், ரஜினி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளானது. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். படத்தில் ரஜினி இளமையாக காட்டப்பட்டிருந்தார். அதிகமான நட்சத்திரங்கள் நடிப்பில் படம் மிகவும் கலர்புல்லாக வெளியாகியிருந்தது.

ஜெயிலர் படம்

ஜெயிலர் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இணைந்துள்ளார் நடிகர் ரஜினி. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஸ்வர்யா ராஜ் ஜோடி?

ஐஸ்வர்யா ராஜ் ஜோடி?

இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 47 ஆண்டுகளை இந்த மாதத்தில் கடக்கவுள்ளார். இதையடுத்து ஜெயிலர் படத்தின் டீசர் அல்லது மோஷன் போஸ்டர் இந்த மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனிருத் இசை

அனிருத் இசை

இந்தப் படத்திற்காக அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், மற்ற நடிகர், நடிகையர் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் சூட்டிங்

ஐதராபாத்தில் சூட்டிங்

ஐதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இதற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் அடுத்ததாக தலைவர் 170 படத்தை பிரபல இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தேசிங்கு பெரியசாமி விளக்கம்

தேசிங்கு பெரியசாமி விளக்கம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் சிறப்பான இயக்குநராக அறியப்படும் தேசிங்கு பெரியசாமி, இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். தலைவரின் அடுத்தப் படத்தை தான் இயக்கவில்லை என்றும் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகருக்கான தேர்வு

நடிகருக்கான தேர்வு

இதேபோல விஜய்யின் அடுத்தப்படத்தை தான் இயக்குவதாக கூறுவதிலும் உண்மையில்லை என்று கூறியுள்ள தேசிங்கு பெரியசாமி, தன்னுடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்கை தான் முடித்துவிட்டதாகவும் படத்திற்கான தயாரிப்பாளரும் தயாராக உள்ளதாகவும் கதைக்கு பொருந்தக்கூடிய நடிகரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X