»   »  எப்ப்ப்பா, எம்ம்ம்மா, ஆத்தாடி: ப. பாண்டி 'டிடி' பற்றி இப்படி சொன்ன சமுத்திரக்கனி

எப்ப்ப்பா, எம்ம்ம்மா, ஆத்தாடி: ப. பாண்டி 'டிடி' பற்றி இப்படி சொன்ன சமுத்திரக்கனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தனுஷை பாராட்டியுள்ளார். தலைப்பில் சொல்லப்பட்டுள்ள டிடி டைரக்டர் தனுஷ், திவ்யதர்ஷினி அல்ல.

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்த படம் பவர் பாண்டி. தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் ஹீரோவான ராஜ் கிரணையே தனது ஹீரோவாக்கினார்.

வேட்டி, சட்டையில் பார்த்த ராஜ்கிரணை ஸ்டைலாக காட்டி வெற்றி பெற்றுள்ளார்.

சமுத்திரக்கனி

பவர் பாண்டி படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பவர் பாண்டி எப்ப்ப்பா எம்ம்மா ஆத்தாடி செம்ம்ம்ம ராஜ் கிரண் அண்ணா, ரேவதி மேடம், பிரசன்னா, என் தம்பி தனுஷ், நொறுக்கிட்டீங்க என தெரிவித்துள்ளார்.

தனுஷ்

சமுத்திரக்கனியின் ட்வீட்டை பார்த்த தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, நன்றி அண்ணே, மிக்க மகிழ்ச்சி.

விஐபி 2

விஐபி 2

விஐபி படத்தை அடுத்து விஐபி 2 படத்திலும் தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி. படத்தில் தான் அப்பா நிஜத்தில் தனுஷ் அவரை அண்ணா என்று தான் அழைக்கிறார்.

கவுதம்

பவர் பாண்டி படத்தை பார்த்த கவுதம் மேனன் கூறியிருப்பதாவது, எங்களின் இயக்குனர் குடும்பத்திற்கு வரவேற்கிறேன் தனுஷ். அருமையான படம். பெற்றோர் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என ட்வீட்டியுள்ளார்.

English summary
Director cum actor Samuthirakani tweeted that, 'POWERRRRRRRRR PANDIIIII # YEPPAAA YEMMAAA AATHADIII SEMMAAA#RAJKIRAN ANNAAA #REVATHII MAM#PRASANNAA#EN THAMBI DANUSHH#NORUKKITENGAAAAAAA'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos