Dhanush: இயக்குநர் தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புது படத்தின் பெயர், கதாநாயகிதான் அல்டிமேட்
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய கம்ப்ளீட் கலைஞர்களில் தனுஷுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. நடிகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக வெற்றிகளைக் குவித்துக் கொண்டே உள்ளார். இதுவரை 50 படங்களில் நடித்துள்ள தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வசூலில் மெகா ஹிட் படமாக மாறியது. படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் படம் நிரம்பிக் காணப்பட்டது. படத்தின் வெற்றிக்குப் பின்னர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தனுஷை நேரில் அழைத்து இரண்டு செக் கொடுத்தார். ஒரு செக் நடிகர் தனுஷ்க்கு என்றும், ஒரு செக் இயக்குநர் தனுஷுக்கு என்றும் கூறப்பட்டது. தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தனுஷ் சிறந்த நடிகர் என்பதற்கு பல படங்களை உதாரணம் கூறினாலும், அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதற்கு, அவர் இயக்கிய இரண்டு படங்களையும் உதாரணமாக கூறலாம். இரண்டு படங்களிலும் திரைக்கதையில் பலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், வெகுஜன ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்தான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்பாரோவ் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மத்தியில் இப்போதே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள மூன்றாவது படம். இதையடுத்து இவரது இயக்கத்தில் நான்காவதாக ஒரு படம் உருவாகவுள்ளது.
இட்லி கடை: அதாவது தனுஷ் தான் இயக்கவுள்ள படத்தில், நித்யா மேனனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படம் இட்லி கடை நடத்தி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண்ணை மைய்யப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என கூறப்படுகின்றது. மேலும் இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளைக் குவிக்கும் எனவும் தனுஷுக்கு நெருங்கிய வட்டாரங்களில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இட்லி கடை என பெயர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நித்யா மேனன்: தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு அண்மையில் அந்தப் படத்திற்காக, தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தனது அசாத்திய நடிப்பினால், எளிமையான அதேநேரத்தில் ஜனரஞ்சகமான கதாபாத்திரத்தை தேசிய விருது பெறும் அளவிற்கு, நடிப்பில் மிரட்டினார். இன்னும் சொல்லப்போனால் தனுஷை தனது நடிப்பினால் ஓரம் கட்டிவிட்டார் என்றே கூறவேண்டும். இந்தப் படம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











