Actor Dhanush: ராயன் படத்தின் கேரக்டர்களை வெளிப்படுத்தும் தனுஷ்.. அட சரவணனும் இருக்காரா!
சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படத்தின் இணைந்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்களின் போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டிருந்தார்.
இன்றைய தினமும் ராயன் படத்தின் அடுத்த கேரக்டரை தனுஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சரவணன் கேரக்டர் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். இதில் வித்தியாசமான கெட்டப்பில் சரவணன் காணப்படுகிறது. இந்த போஸ்டர்கள் அனைத்தையும் தனுஷ் கருப்பு வெள்ளையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு விடையாக படம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் ராயன் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ப பாண்டி படத்தின் சிறப்பான வரவேற்பை தொடர்ந்து சில ஆண்டு காலங்கள் மீண்டும் இயக்கத்தில் ஈடுபடாமல் இருந்தார் தனுஷ். அடுத்தடுத்து நடிகராக அவரது கமிட்மெண்ட்களால் அவரால் இயக்கத்தில் ஈடுபட முடியவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இதில் அவரது ஐம்பதாவது படமான டி50 படத்தையும் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
அடுத்தடுத்தப் படங்கள்: இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங் இன்னும் 30 சதவிகிதம் மீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய டி50 படத்திற்கு ராயன் என்று தனுஷ் தலைப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவருடன் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் இருவரும் இருந்தனர். இவர்கள் ரோட்டோர உணவகத்தை நடத்தி வருவதாக அதில் காணப்பட்டது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களையும் அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கேரக்டர் அறிமுகம்: எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் அடுத்தடுத்த கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு இருந்தார் தனுஷ். இதனிடையே இன்றைய தினம் அவர் படத்தின் எந்த கேரக்டரை அறிமுகப்படுத்துவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் அவர் அடுத்த கேரக்டரை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சரவணன், வித்தியாசமான லுக்கில் இந்த போஸ்டரில் காணப்படுகிறார்.
கருப்பு வெள்ளை போஸ்டர்கள்: தனுஷ் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள இந்த போஸ்டர்கள் கருப்பு வெள்ளையில் காணப்படுகின்றன. இதன் மூலம் அவர் அழுத்தமான கதைக்களத்தை மேற்கொண்டுள்ளதை குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தில் ஒவ்வொரு நடிகருக்குமே முக்கியமான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக படத்தில் துஷாரா விஜயன் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் தனுஷ் யாரை அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே காணப்படுகிறது.
ராயன் பட ரிலீஸ்: ஏப்ரல் மாதத்தில் ராயன் படம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய டி51 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக எச் வினோத் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











