தனுஷ் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா? - தயாரிப்பு மாற்றம்!
Recommended Video

சென்னை : நடிகர் தனுஷ் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தனுஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு 'நான் ருத்ரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம்.

இயக்குநர்
நடிகரான தனுஷ், 'பவர் பாண்டி' மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தாண்டி இயக்குநர் எனும் இடத்தையும் பிடித்ததால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

அடுத்த படம்
தனுஷ் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. 'பாகுபலி' போன்ற சரித்திரக் கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாகக் கூறப்பட்டது. அவர் நடிக்கும் படங்களை முடித்தபிறகு டைரக்ஷன் வேலையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தனுஷும் நடிப்பார்
பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க, தனுஷும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது. இந்தப் படத்துக்கு 'நான் ருத்ரன்' எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

வுண்டர்பார் பிலிம்ஸ்
இந்நிலையில், நிறைய படங்களைத் தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











